2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நூறாவது பிறந்த தினத்திற்கு ஆணின் துகிலுரி நடன விருந்து கோரிய மூதாட்டி

Super User   / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

100 வயதான மூதாட்டியொருவர் தனது நூறாவது பிறந்த தினக் கொண்டாட்டத்திற்காக ஆண் துகிலுரி நடனக் கலைஞர் ஒருவரை அழைத்துவரும்படி கூறியதன் மூலம் அவரது குடும்பத்தினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனின் பேர்மிங்ஹாம் நகரத்தைச் சேர்ந்த கிளேயர் ஓர்மிஸ்டன் என்ற பெண்ணே தனது வாழ்க்கையின் மைல்கல்லான பிறந்த தினத்திற்காக துகிலுரி நடனடிக் கலைஞர் வேண்டுமெனக் கோரியுள்ளார்.

மேற்படி வயோதிப பெண்ணின் மகள் மார்கரேட் இது குறித்துத் தெரிவிக்கையில், "நாங்கள் எமது தாயாரிடம் அவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக என்ன வேண்டுமென கேட்டோம். அப்போது அவர் பல விதமான யோசனைகளை முன்வைத்தார்.

அதில் முதலாவது  உண்மையில் நிலவில் சென்று அமரவேண்டும் என்பதாகும். அது பெரும்பாலும் சாத்தியப்படாத ஒரு விடயமாகுமென நான் கூறினேன். வேறேதும் யோசனை உள்ளதா  என கேட்டேன். அப்போது அவர் துகிலுரி நடனக் கலைஞரை அழைத்து வரும்படி கூறினார்.

என்னால் அதனை நம்பவே முடியவில்லை. அவர் மோசமான நகைச்சுவை உணர்வுகொண்டவர். நான் அதிர்ச்சியில் ஏறத்தாழ எனது கதிரையிலிருந்து விழுந்துவிட்டேன்" என்றார்.

குறித்த வயோதிப பெண்ணின் ஆசை அண்மையில் நிறைவேறியது. அவரது நூறாவது பிறந்த தினத்தில் அவரின் வீட்டிற்கு, ஆண் துகிலுரி நடனக் கலைஞர் ஒருவர் பணம் செலுத்தப்பட்டு அழைத்துவரப்பட்டார்.

கிளேயரும் அவ்வீட்டிலுள்ள ஏனையோரும் இந்நிகழ்வில் கைதட்டி குதூகலித்தனர்.

இதுக்குறித்து பிறந்த தினம் கொண்டாடிய அவ் வயோதிபப் பெண் தெரிவிக்கையில், "நான் உண்மையில் மகிழ்ச்சியடைந்தேன். எனது முகத்தில் புன்னகையை ஏற்படுத்தியது" என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Hot water Friday, 07 October 2011 05:52 AM

    பாட்டியின் ஆசை என்ன என்று இதற்குமுன் யாரும் கேட்கவில்லையா?

    Reply : 0       0

    bzukmar Friday, 07 October 2011 04:17 PM

    50 திலும் ஆசை வரும் என்பதை 100 லும் ஆசைவரும் என்றால் பிழையில்லையே? so cute grand ma....?

    Reply : 0       0

    asker Friday, 07 October 2011 04:21 PM

    காட பெண் மூதாட்டி

    Reply : 0       0

    ms Saturday, 08 October 2011 06:59 PM

    செம பாட்டி மா.....

    Reply : 0       0

    xlntgson Saturday, 08 October 2011 08:43 PM

    நிர்வாண பதவி என்னும் நிலையை அடைய, நடன நிர்வாணம் தேவை போலும்! மனம் போன போக்கில் நடவாவிட்டால் மனதுக்கு சந்தோஷம் இல்லை என்னும் கொசு சிந்தனை- கொசு ஒழிப்புக்கு மனிதர்கள் மும்முரமாக முயன்றாலும் கொசுவின் மூளை எவ்வாறு இயங்குகிறது என்று விஞ்ஞானிகளுக்கும் கண்டு பிடிக்க இயலாமால் இருக்கிறது- ஐன்ஸ்டைனும் தோற்கடிக்கப் போகும், கணத்தில் மன மாற்றம் ஏன் என்று கண்டால் நாம் எல்லோரும் பரம் பொருளை நிர்வாணாவில் அல்லாமல் சாதரணமாகவே அறியலாம் என்கின்றனர்-
    time travelநேரப் பயணமும் சாத்தியமே ஆராய்ச்சி தொடர-- random theory.

    Reply : 0       0

    m.t.m.siyath Saturday, 15 October 2011 01:33 PM

    மூதாட்டிக்கு இது தேவையா?

    Reply : 0       0

    Fanam Wednesday, 19 October 2011 07:48 PM

    வெட்கமில்லாத கலாச்சாரம்.... இப்படி ஒரு கோரிக்கை, இதை வெட்கமில்லாமல் சொல்லும் மகள், காசுக்கு நடனமாடும் இவர்....?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .