Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளம் ஆடை வடிவமைப்பாளரான ரீட்டா மரியா என்பவர் பழைய 'பிரா'க்களை வெவ்வேறு வடிவத்திலான கைப்பைளாக மாற்றியுள்ளார்.
வொண்டர் பிரா வகையைச் சேர்ந்த பிராக்களை அவர் இதற்குப் பயன்படுத்தியுள்ளார். 1990 களில் உலகம் முழுவதும் வொண்டர்பிராக்கள் வெகுவாக பிரபல்யம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்காக ரீட்டா மரியாவுக்கு அவரின் நண்பிகள் பழைய வொண்டர் பிராக்களை அன்பளிப்புச் செய்தனராம். இந்த பிராக்களை பயன்படுத்தி வெவ்வேறு அளவுகள் மற்றும் நிறங்களிலான கைப்பைகளை மரியா உருவாக்கியுள்ளார்.
'வொண்டர் பிரா' எனும் வர்த்தக குறியீடானது 1935 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இஸ்ரேலிய ஆண் விமானியொருவரால் ஸ்தாபிக்கப்பட்டது.
அக்காலக்கட்டத்தில் இலாஸ்திக் பொருட்கள் அதிகம் கிடைக்காத நிலையில் அணிபவர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் பிராவை உருவாக்க எண்ணி அவர் இந்த வொண்டர் பிராவை அவர் அறிமுகப்படுத்தினார்.
எனினும் 1991 ஆம் ஆண்டு அது மீள அறிமுகப்படுத்தப்படும்வரை கனடாவிற்குள் இந்த வகை பிரா மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதன்பின் உலகம் முழுவதும் பிரபல்யானது.
M.I. Nousath Saturday, 24 September 2011 03:25 PM
ஐயோ ஐயோ இது கடும் ஒரு கண்டுபிடிப்புதான்.
Reply : 0 0
risimb Saturday, 24 September 2011 06:49 PM
வேற யோசனை தோன்றவில்லையோ! இலங்கைக்கு கொஞ்சம் வாங்களேன் ple.
Reply : 0 0
jawfar Sunday, 25 September 2011 02:35 AM
ரீட்டாவுக்கு முதல் செய்த தொழிலில் இலாபம் கிடைக்கவில்லையோ.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago