2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பரபரப்பான வீதியில் நிர்வாணமாக திரிந்த பெண் கைது

Kogilavani   / 2011 செப்டெம்பர் 02 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவில் பெண்ணொருவர் பொது இடத்தில் நிர்வாணக் கோலத்துடன் திரிந்த குற்றச்சாட்டில் 3 நாட்களில் இரண்டாவது தடவையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அலினா லாராஸபல் எனும் 32 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  இப்பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இப் பெண் அப்பட்டமான நிர்வாணத் தோற்றத்துடன் மொன்ரோ கவுன்ரி பிராந்தியத்தின் பரபரப்பான வீதியில்  தவிழ்ந்து சென்றதை பொலிஸ் அதிகாரிகள் கண்டுள்ளனர்.

இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில், லாராஸபெல் தனது கைகளாலும் முழங்கால்களாலும் தவழ்ந்து சென்றார். அவரின் மீது  மோதுவதை தவிர்ப்பதற்கு கார்கள் தடுமாறின ஏன பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் அப்பெண்ணை தடுக்க முயன்றபோது, அவர்களுடன் அப்பெண் சண்டையிட்டதாகவும் பின்னர் மருத்துவ உத்தியோகஸ்தர்களின் உதவியுடன் அப்பெண்ணை ஸ்ரெட்ச்சர் ஒன்றில் வைத்து சுற்றி, அருகிலுள்ள வைத்தியசாலையொன்றுக்கு கொண்டு சென்றதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு இரு நாட்களுக்குமுன்னர்  மற்றொரு தெருவில் வைத்து இதே குற்றத்திற்காக அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். காலை 7 மணியளவில் வீதியில் நிர்வாணமாக் திரியும் பெண்ணொருவரினால் இடையூறு ஏற்படுவதாக அவசர அழைப்புகள் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அப்போதும் பொலிஸார் கைது செய்ய முயன்றபோது அவர் பொலிஸாருடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் பொலிஸ் ரோந்துக் காரொன்றில் அவர் ஏற்றிச்செல்லப்பட்டார்.

லாராஸபெல்லின் ஆடைகளும் பணப்பையும் பை ஒன்றினுள் இருந்தாகவும் சிறிய பிளாஸ்திக் பையொன்றில்  கஞ்சா போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • bzukmar Saturday, 03 September 2011 05:32 AM

    நம் நாட்டில் கிரீஸ் மனிதன் அச்சமூட்டல்,அமெரிக்காவில் நிர்வாண பெண்கள், மக்களை அச்சமூட்டுகின்றனரா?

    Reply : 0       0

    roshan Saturday, 03 September 2011 09:40 AM

    இந்தே உலகத்தில் மனிதனை சுதந்திரமா வாழேவ விடவே மாட்டாங்கப்பா.

    Reply : 0       0

    xlntgson Saturday, 03 September 2011 09:46 PM

    நல்ல சங்கதிகள் தான்!
    ஓர் ஆணை அனுப்பி மயக்கித்தான் உடை அணிய வைக்க இயலுமோ? தொட்டாலும் குற்றம்- பெண்களை தொட விடுவாரோ தெரியாது!

    Reply : 0       0

    Kanmany Sunday, 04 September 2011 04:34 AM

    roshan, நீங்கள் எதை சுதந்திரம் என்கிறீர்கள். நீங்கள் உங்களது மனைவி அல்லது சகோதரிகளுடன் செல்லும் போது ஒரு ஆண் நிர்வானமாக உங்கள் அனைவர் முன் வந்து நின்றால் அது அவனது சுதந்திரம் என்பீர்களா? அமெரிக்காவில் இதனை ஒரு குற்றமாக, வெட்கமான செயலாக நினைக்கிறார்களே, அதற்கு போய் சந்தோஷப்படுங்கள்.

    Reply : 0       0

    reemco Tuesday, 06 September 2011 02:23 AM

    எனக்கு ரோசன் சொன்னது ஜஸ்ட் ஒரு ஜோக் மாதிரி தென்படுகிறது. கண்மணி உங்களுக்கு அது தென்படவில்லையா?. ஏன் நீங்கள் டென்சன் ஆகிறீர்கள். கூல் டவ்ன்.

    Reply : 0       0

    rahmathkhan Thursday, 08 September 2011 11:45 PM

    நான் நினைக்கிறேன், அது ஒரு சைக்கோ கேசாக இருக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .