2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

உணவு உட்கொள்ள வந்த மன்னரையும் அரசியையும் திருப்பி அனுப்பிய ஹோட்டல்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவீடன் நாட்டின் மன்னரும் அரசியும் ஹோட்டலொன்றில் உணவு உட்கொள்ளச் சென்றபோது அந்த ஹோட்டலிலிருந்து அதன் உரிமையாளரால் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியின் லாடன்பேர்க் நகரிலுள்ள ஸும் குவெல்டெனென் எனும் ஹோட்டலின் உரிமையாளரான நதினி ஸ்கெலென்ஞ்பர்கர் எனும் பெண்ணே, சுவீடன் மன்னரான 16 ஆம் கார்ல் மற்றும்  அரசி சில்வியா  தம்பதியை இவ்வாறு திருப்பிஅனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் சுவிஸ் மன்னர் மற்றும் அரசி இருவரும் என்னுடைய ஹோட்டலுக்கு வரும்போது அங்கு திருமண வைபவமொன்று நடந்துகொண்டிருந்தது.

அவர்கள் மன்னருக்குரிய கிரீடம், செங்கோல் எதுவும் இல்லாத நிலையிலிருந்ததால் நான் அவர்களை அடையாளம் காணவில்லை.

'அச்சந்தர்ப்பத்தில் நீங்கள் தெரு சுத்திகரிப்பாளராகவோ அல்லது அரசியாகவோ இருந்தாலும், எங்களிடம் போதுமான அளவு மேசைகளோ அல்லது சமையல் கலைஞர்களோ இருக்கவில்லை. அந்நேரத்தில் எமது கைகள் கட்டப்பட்டிருந்தைப் போலிருந்தன' என நதினி ஸ்கெலென்ஞ்பர்கர் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பிருனும் சுவீடன் மன்னர்  தம்பதிகளுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்புவதற்கு நதினி ஸ்கெலென்ஞபேர்கரும் அவரது கணவரும் திட்டமிட்டுள்ளனர்.

'நாங்கள் உங்களை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று கூறி அவர்களிடம் மன்னிப்புக்கோர விரும்புகிறோம். அவர்களை உபசரிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நாங்கள் மற்றுமொரு வேளையில் அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவோம்'  என  நதினி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அந்த ஹோட்டலிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சுவீடன் மன்னரும் அரசியும் சந்தை சதுக்கத்தில் பீஸா வாங்கி உட்கொண்டதாக பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0

  • Citizen Tuesday, 23 August 2011 08:10 PM

    இந்நிலை நமது மன்னருக்கு ஏற்பட்டால் என்ன நடந்திருக்கும்!?

    Reply : 0       0

    naren Wednesday, 24 August 2011 01:07 AM

    கடைய கொளுத்தி போடுவர் இல்ல

    Reply : 0       0

    deenmohamed Wednesday, 24 August 2011 07:50 PM

    இல்ல தம்பி, கடையில கிரிஸ் மனிதன அனுப்பி விடுவாங்க.

    Reply : 0       0

    hussain Thursday, 25 August 2011 07:07 PM

    ஏரியாவே காலிதான்.

    Reply : 0       0

    aman Saturday, 27 August 2011 03:55 AM

    புரியலையா என்ன நடக்கும் என்று ????? கோவிந்தாதான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .