2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

உள்ளாடையை தலையில் அணிந்தவாறு கடையில் கொள்ளையடித்த நபர்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 22 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளாடையை தலையில் அணிந்தவாறு கடையில் கொள்ளையடித்த நபரை பிடிப்பதற்கு அமெரிக்காவின் டல்லாஸ் மாநில பொலிஸார் முயற்சித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கமெராவில் பதிவுசெய்யப்பட்டிருந்த இக்கொள்ளைக் காட்சியை  அமெரிக்காவின் டல்லாஸ் மாநில பொலிஸார் யூரியூப் இணைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் இவ்வாறு கோமாளித்தனமாக ஆடையணிந்து பணத்தை கொள்ளையடிப்பதற்கு முயல்வதான காட்சிகள் மேற்படி வீடியோவில் பதிவாகியுள்ளன.
அந்நபர் உள்ளாடையை தலையில் அணிந்தவாறு கடைக்குள் நுழைவதும் கண்காணிப்பு கமெராக்களுக்கு முகத்தை மறைப்பதும் பின்னர் அவர் காசாளரை நெருங்கி பணத்தை தரும்படி  அச்சுறுத்தும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளன.

அந்நபர் ஆயுதத்தை ஆடைக்குள் மறைத்து  கொண்டு வந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

மேற்படி வீடியோவை வெளியிட்ட டல்லாஸ் பொலிஸார், சந்தேக நபர் குறித்த தகவல்களை தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொதுமக்களை கோரியுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0

  • Nirmalalraj Monday, 22 August 2011 07:00 PM

    அட, அமெரிக்காவில் உள்ளாடை மனிதன் தொல்லை!

    Reply : 0       0

    xlntgson Monday, 22 August 2011 09:35 PM

    What use CCTVs? The crime rate is proportionate to inflation! Case disposals can't keep pace with the rate!

    Reply : 0       0

    siraj Tuesday, 23 August 2011 10:17 AM

    என்ன கொடும சார் ?...............

    Reply : 0       0

    Citizen Tuesday, 23 August 2011 07:58 PM

    அட உலக பொலிஸ் காரன் வீட்டிலும் பஞ்ச கொள்ளயா?

    Reply : 0       0

    roshan Tuesday, 23 August 2011 11:19 PM

    அட அமெரிக்காவில் உள்ளாடை மனிதன் தொல்லை. இலங்கையில் மர்மமனிதன் தொல்லை.

    Reply : 0       0

    RUFI Friday, 26 August 2011 10:42 PM

    நிர்மலா ராஜ் சரி காமடியா இருந்தாலும் சரியாய் சொன்னிங்க போங்க/

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .