Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபரொருவரின் காற்சட்டைக்குள் துப்பாக்கி வெடித்து அவரது ஆணுறுப்பில் துப்பாக்கி குண்டுபாய்ந்த நிலையில், அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
பீனிக்ஸ் நகரைச் சேர்ந்த 27 வயதான ஜோசுவா செடோ என்ற நபரே இந்த விபரீதத்தை எதிர்கொண்டுள்ளார்.
இவர் தனது காதலியான காரா கிறிஸ்டோபரின் துப்பாக்கியை தனது காற்சட்டை பைக்குள் வைத்துக்கொண்டு கடையொன்றிற்கு சென்ற சமயம் மேற்படி துப்பாக்கி தற்செயலாக வெடித்துள்ளதாக சான்ட்லர் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காற்சட்டைக்குள் துப்பாக்கி வெடித்ததால் துப்பாக்கித் தோட்டா, அவரின் அந்தரங்க உறுப்பை தாக்கியதுடன் அவரது இடது தொடையையும் ஊடுருவியுள்ளது.
அதையடுத்து அவசரசேவைப் பிரிவுக்கு தகவல்கொடுக்கப்பட்டு, அவசரசேவைப் பிரிவினரால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சென்டலர் பொலிஸார் இச்சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை காயமடைந்த நிரந்தர பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
4 hours ago