2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சமையலறையில் அணுவை பிளக்க முயன்ற நபர் கைது

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சமயலறையில் அணுவை பிளக்க முயற்சித்த நபர் ஒருவரை சுவீடன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ரிச்சர்ட் ஹென்டில் எனும் 31 வயதான  நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தான் பொழுதுபோக்காக இதனை செய்ததாக அந்நபர் தெரிவித்துள்ளார்.

சுவீடனின் தென் பிராந்தியத்தில் தொடர்மாடிக் கட்டிடத்திலுள்ள  வீட்டின் சமையலறையில் கதிர்வீச்சு மூலகங்களான  அமெரிசீயம், யூரேனியம், ரேடியம் ஆகியவற்றை  அவர் சேமித்து வைத்துள்ளார்.

அனுமதியின்றி கதிர்வீச்சுப் பொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

தான், தனது வீட்டில் அணு உலையை உருவாக்குவதற்கு பல மாதங்களாக முயற்சித்து வந்ததாக ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். அதனூடாக பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் அவர் தனது வலைப்பதிவில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

'எப்போதும் எனக்கு பௌதிகவியலிலும் இரசாயனவியலிலும் அதிக ஆர்வமுண்டு. வீட்டில் அணுவை பிளப்பது சாத்தியமா என அறிவதற்கு நான் முயற்சித்தேன்' என அவர் கூறியுள்ளார்.

ரிச்சர்ட் ஹெண்டில் குற்றவாளியாக காணப்பட்டால்  அவருக்கு அபராதம் அல்லது இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வீட்டில் அணுக்கதிர்வீச்சை பொலிஸார் கண்டறியாவிட்டாலும் தனது நடவடிக்கை ஆபத்தானது என ரிச்சர்ட் ஹெண்டில்  இப்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • risimb Saturday, 06 August 2011 12:43 AM

    உங்களுக்கு உலகத்தில் வாழ வாய்ப்பு உண்டு. இதிலும் உங்களுக்கு விளையாட்டா?

    Reply : 0       0

    Dilan Saturday, 06 August 2011 02:03 AM

    அணுவை பிளக்கத் தெரிந்த நபருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியவில்லையா? அரைகுறை அறிவு ஆபத்து.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .