Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 30 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த நபரொருவர், உடலுறவின்போது துரதிஷ்டவசமாக அப்பெண் இறந்து விட்டாரென பொலிஸாரிடம் கூறியதாக பிரித்தானிய நீதிமன்றமொன்றில் தெரிவிக்கப்பட்டது.
டேனியல் லங்காஸ்டர் எனும் 25 வயதான இந்நபர், 23 வயதுடைய தனது காதலி அன்னா பாங்க்ஸுடன் ஆவேசமாக உடலுறவு கொண்டதாக பொலிஸாரிடம் கூறினார். வழக்கமாக தான் தனது காதலியின் கழுத்துப் பகுதியில் கைகளை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஒரு பிள்ளையின் தாயான அனா பாங்ஸ், கட்டிலில் இறந்துகிடந்ததை மருத்துவ உதவியாளர்கள் கண்டனர்.
ஆனால், விசாரணையை எதிர்நோக்கி விளக்கமறியலில் இருந்தபோது, தன்னை அனா ஏமாற்றியதால் தான் அவரை கொலை செய்ததாக சக கைதியொருவரிடம் டேனியல் லங்காஸ்டர் தெரிவித்துள்ளார். தான் வேண்டுமென்றே அப்பெண்ணின் கழுத்தை நெரித்ததாக அவர் கூறியுள்ளதாக நீதிமன்றில் அரச தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்த வழக்கு மன்செஸ்டரிலுள்ள நீதிமன்றமொன்றில் தொடர்கிறது.
riyas Monday, 01 August 2011 12:13 AM
மனித சட்டங்கள்தான் இவர்களை வாழ வைக்கிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
4 hours ago