2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆண்கள் கால்பந்தாட்ட அணியில் விளையாடும் பெண்

Kogilavani   / 2011 ஜூலை 28 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குரோஷியாவில் ஆண்கள் கால்பந்தாட்ட அணியொன்றில் இணைந்து போட்டிகளில் பங்குபற்றுவதற்கு பெண்ணொருவர் அனுமதி பெற்றுள்ளார்.

நைவ்ஸ் செல்சியஸ்  என்ற இந்த  வீராங்கனை ஸ்லேவன்பெலுபோ எனும் ஆண்கள் அணியில் இணைந்து விளையாடவுள்ளார்.

இதே அணியில் விளையாடும் டினோ டிர்பிக் என்பவரின் மனைவி இவர்.

பாடகியும் மொடல் அழகியும் எழுத்தாளருமான நைவ்ஸ் செல்சியஸ், குரோஷியா கால்பந்தாட்ட லீக்போட்டியொன்றின் முடிவில் வெற்று அரங்கில் தனது கணவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஆண்கள் அணியில் இணைந்து விளையாடப்பபோவதாக அறிவித்துள்ளதன் மூலம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நைவ்ஸ் செல்ஸியஸ்.

29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஸெக்ராப் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவதற்கு நைவ்ஸுடன் ஸ்லேவன் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போட்டியில் முன்கள வீராங்கனையாக களமிறங்கவுள்ளதாக செல்சியஸ் நைவ்ஸ் அறிவித்துள்ளார்.

ஆண்கள் அணியில் பெண்கள் விளையாட அனுமதிக்க விதிகளில் இடமுண்டா என்பதை அந்நாட்டு கால்பந்தாட்ட அதிகாரிகள் ஆராய்ந்து  வருகின்றனர்.

எனினும் போட்டியில் தனது நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் தான் கவலையடையவில்லை என நைவ்ஸ் கூறியுள்ளார்.

'எனது கணவரே எனது பயிற்றுநர். நாங்கள் அதிகளவு பயிற்சிகளை பெற்றுள்ளோம்' என்று நைவ்ஸ் செல்சியஸ்  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • நண்பன் Sunday, 31 July 2011 04:54 AM

    அப்படியானால் அந்த விளையாட்டு உருப்பட்ட மாதிரித்தான் இருக்கும்.

    Reply : 0       0

    hafeez Wednesday, 03 August 2011 12:10 AM

    matchkku yaaru rafree? yaha irupparo aana penna?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .