2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சிறுமியை கடத்தியவரின் அந்தரங்க உறுப்பில் செங்கல்லை கட்டிவைத்து தண்டணை

Kogilavani   / 2011 ஜூலை 22 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறுமி ஒருவரை கடத்தியதுடன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்த நபரொருவருக்குத் தண்டனையாக கிராம மக்கள் அந்நபரை  நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க உறுப்பில் செங்கல்லை கட்டி ஊர்வலமாக நடக்கவைத்த  சம்பவமொன்று பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஷின்  தென் பிராந்தியமான, டாக்காவிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிராமமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

30 வயதான  மேற்படி நபருக்கு கடந்த சனிக்கிழமை உள்ளூர் நிர்வாக சபையொன்று இத்தண்டனையை வழங்கியுள்ளது.

இந்நபர் 12 வயதான சிறுமியொருத்தியை கடத்திச்சென்று  கட்டாயப்படுத்தி திருமணம் புரிந்துள்ளார். பின்னர் அச்சிறுமி அவரின் பிடியிலிருந்து தப்பிச் சென்று இது தொடர்பாக மக்களிடம் புகார் செய்தாள்.

அதையடுத்து கிராம சபையின் தலைவரும் கிராம பெரியவர்கள் பலரும் சேர்ந்து  குறித்த நபரை தாக்கியுள்ளதுடன் அவரை நிர்வாணமாக்கி அவரது ஆணுறுப்பில் செங்கல்லை கட்டிவிட்டு, வீதியில் நடக்கச்செய்தனர். இதை சுமார் 200 பேர் பார்த்துக்கொண்டிருந்ததாக உப பொலிஸ் பரிசோதகர் பினோய் கிருஷ்ணா கார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி  வருவதாக பங்களாதேஷ் பெரிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • Nesan Saturday, 23 July 2011 07:05 PM

    கடுமையான தண்டனைதான். ஆனால் இத்தகைய நபர்களை திருத்த வேறு வழி?

    Reply : 0       0

    xlntgson Saturday, 23 July 2011 09:31 PM

    Castration?

    Reply : 0       0

    ris Monday, 25 July 2011 05:23 PM

    தண்டனை அதிகமானால்தான் தப்புகள் குறையும்.....

    Reply : 0       0

    nafris Friday, 05 August 2011 10:31 PM

    மனசாட்சி இல்லாதவன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .