Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 21 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய ஆடை விற்பனை நிலையமொன்றில் ஜன்னல்களில் ஆளுயர பொம்மைகளுக்குப் பதிலாக அரை நிர்வாண மொடல்கள் நிறுத்திவைக்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மிலான் நகரிலுள்ள அந்த ஆடையகத்தில் ஆண்களும் பெண்களும் கட்டை காற்சட்டை, மற்றும் நீச்சலுடைகளை அணிந்து நின்றுகொண்டிருந்தனர்.
கோடை கால நீச்சல் மற்றும் குளியல் ஆடை விற்பனையை ஊக்குவிப்பதற்கான திட்டத்தின்படி இம்மொடல்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
ஆனால் இத்தாலிய தொழிற்சங்கங்கள் இந்நடவடிக்கையை கண்டித்துள்ளன. இது மனித உடலை வர்த்தகமாக்கும் நடவடிக்கை என இத்தாலிய தொழிற் சங்கம் விமர்சித்துள்ளது.
'நாங்கள் இந்த விற்பனைக்கோ திறந்த சந்தைப் பொருளாதாரத்திற்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால், நாங்கள் ஊழியர்களின் நாகரீகம் மற்றும் அறிவுள்ள வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளை கருத்தில் கொள்கின்றோம்' என அத் பில்காம்ஸ் சி.ஜி.ஐ.எல். எனும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் மேற்படி இளம் மொடல்கள் இவ்வாறான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளால் சிறிது நேரம் காணாமல் போனாலும் பின்னர் மீண்டும் அந்த வர்த்தக நிலையத்தின் கண்ணாடிகள் முன்னால் வந்து நின்றனர். மொடலிங் என்பதும் ஒரு தொழில் தான் என அவர்கள் கூறியுள்ளனர்.
மேற்படி தொழிற்சங்கங்கள் தமது வியாபாரத்திற்கு மேற்கொண்ட 'இலவச பிரச்சாரத்திற்கு' நன்றி தெரிவிப்பதாக அவ்வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், கூறியுள்ளார்.
'வீதிகளில் வெட்டியாக திரிந்தவர்களுக்கு ஒரு தொழிலை வழங்கி ஊதியமும் வழங்கினோம். அதில் என்ன தவறு?' என்கிறார் அவர்.
riyas Friday, 22 July 2011 12:59 PM
இத விட கேவலம் என்ன சே
Reply : 0 0
nafris Friday, 05 August 2011 10:44 PM
fashion anturu solli maanam flaying wind
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago