2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மாமியாரின் பாலியல் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட மருமகளுக்கு அபராதம்

Kogilavani   / 2011 ஜூலை 18 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது மாமியாரை பழிவாங்கும் நோக்கில் மாமியாரின் பாலியல் வீடியோவொன்றை இணையத்தளத்தில் தரவேற்றம் செய்த குற்றத்திற்காக பெண்ணொருவருக்கு 250 யூரோ (சுமார் 38,000 ரூபா) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

மரியா ஐவனோவா என்ற 24 வயதுடைய பெண்ணுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.

இவரின் மாமியாரான டாட்டியானா அலெக்ஸேயேவ்னா என்ற (51 வயது) பெண் தனது காதலனான விளாடிமிர் போரோ (வயது 53) என்பருடன் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை தனது செல்லிடத் தொலைபேசி மூலம் தானே பதிவு செய்துள்ளார்.

அதன்பின் மரியா ஐவனோவாவுக்கும் டாட்டியானாவுக்கும் இடையில் வாக்குவாதமொன்று நடைபெற்றது. அப்போது டாட்டியானா மறதியாக மரியா ஐவனோவின் முன்னால் தனது செல்லிடத் தொலைபேசியை வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

அத்தொலைபேசியை எடுத்து பார்த்தபோது, அதில் தனது மாமியாரின் அந்தரங்க வீடியோவை கண்ட ஐவனோவா அக்காட்சிகளை இணையத்தளமொன்றில் தரவேற்றம் செய்தார். இணையத்தளத்தில் இக்காட்சிகளை பெரும் எண்ணிக்கையானோர் பார்வையிட்டனர்.

டாட்டியானாவின் நண்பர்கள் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு அவரின் பாலியல் காட்சிகளை இணையத்தளத்தில் பார்வையிட்டதாக தெரிவித்த பின்னரே அவருக்கு இவ்விடயம் தெரியவந்தது. அதையடுத்து டாட்டியானா இதுகுறித்து பொலிஸில் முறையிட்டுள்ளார்.

மொஸ்கோவிலுள்ள நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாணையின்போது மரியா ஐவனோவா இக்குற்றத்தை ஒத்துக்கொண்டார். அதையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மரியா ஐவனோவாவின் கணவர்,  இச்சம்பவத்தையடுத்து அவரை விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 20 July 2011 09:02 PM

    O tempora, O mores!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .