Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Super User / 2011 ஜூலை 14 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிகையலங்கார நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளைடிக்க வந்த நபரை அந்நிலையத்தின் உரிமையாளரான பெண், கண்மூடித்தனமாகத் தாக்கி கட்டி வைத்ததுடன் 3 நாட்கள் பாலியல் அடிமையாக நடத்திய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் மென்சோவ்ஸ்க் நகரிலுள்ள சிகையலங்கார நிலையமொன்றில் 32 வயதான விக்டர் ஜாசின்கி என்பவர் கொள்ளையடிக்கச் சென்றார். சிகையலங்கார நிபுணரான பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி பணம் முழுவதையும் தருமாறு ஜாசின்கி மிரட்டினார்.
ஆனால், 28 வயதான ஒல்கா ஸாஜெக் எனும் அப்பெண்ணிடமிருந்து ஜாசின்கிக்கு பணம் கிடைக்கவில்லை. மாறாக, ஒல்கா கொடுத்த சரமாரியான அடி உதையில் கீழே சாய்ந்தார் ஜாசின்கி. பின்னர் ஹெயார் ட்றையரில் உள்ள வயரைப் பயன்படுத்தி ஜாசின்கியை கட்டிவைத்தார்.
இளம் பெண் துப்பாக்கியை கண்டு பயந்துவிடுவாள் என ஜாசின்கி எண்ணியிருக்கலாம் ஆனல் ஓல்கா ஜாஸேக் கராத்தேயில் கறுப்புப்பட்டி பெற்றவர் என்பது ஜாசின்கிக்கு தெரியாமல் போனது.
ஓல்கா அத்துடன் விட்டுவிடவில்லை. அந்த மனிதரை சிகியலங்கார நிலையத்தின் பின் அறைக்கு இழுத்துச் சென்று, ஆடைகளை களைந்து 3 நாட்கள் பாலியல் அடிமையாக பயன்படுத்தினாராம். அந்நபருக்கு 'பாடம் படிப்பிப்பதற்காக' தான் இப்படி செய்ததாக பொலிஸாரிடம் ஒல்கா கூறியுள்ளார்.
3 நாட்களின் பின்னர் 'என் கண்ணில் படாதே' என்று எச்சரித்து அந்த நபரை விடுவித்தார் ஒல்கா.
விக்டர் ஜாசின்கி, அந்தரங்க உறுப்புப் பகுதியில் கடும் காயம் ஏற்பட்ட நிலையில் முதலில் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு பின்னர் பொலிஸில் பொலிஸில் சென்று ஒல்காவுக்கு எதிரகா முறைப்பாடு செய்தார்.
தன்னை றேடியேட்டர் இயந்திரமொன்றுக்கு முன்னால் சங்கிலியால் கட்டி வைத்ததாகவும் வயாகரா மாத்திரமே உண்ணக்கொடுத்தாகவும் ஒல்கா மீது ஜாசின்கி புகாரிட்டார்.
இதுதொடர்பாக ஒல்கா ஸாஜெக்கிடம் பொலிஸார் விசாரித்தபோது 'ஆம் நாம் சில தடவை உடலுறவு கொண்டோம். ஆனால் அவருக்கு நான் புதிய ஜீன்ஸ், உணவு வாங்கிக்கொடுத்தேன். போகும்போது 1000 ரூபிள் (சுமார் 3800 ரூபா) கொடுத்து அனுப்பினேன்' என ஒல்கா கூறியுள்ளார்.
எனினும் விக்டர் ஜாசின்கி, ஒல்கா ஸாஜெக் இருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago