2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

போல் டான்ஸிங்கை தொழிலாக தெரிவு செய்த இளைஞர்

Kogilavani   / 2011 ஜூலை 13 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் போல் டான்ஸிங் எனும் கம்பத்தில் சுற்றி ஆடும் நடனத்தை தனது தொழில்சார் கலையாக தேர்ந்தெடுத்துள்ளார். அதனூடாக மாதமொன்றிற்கு 10 லட்சம் ரூபா வரை  அவர் வருமானம் பெறுகிறார்.

போல் டான்ஸிங் பொதுவாக பெண்களாலேயே ஆடப்படும் கவர்ச்சி நடனமாகும். ஆனால், சீனாவின் தென்பிராந்தியமான சான்டோங் மாகாணத்தின் கிங்டாவோ பிரதேசத்தைச் சேர்ந்த ஹா டாவோ என்ற இந்த இளைஞர், 6 வருடங்களுக்கு முன் ஒரு பெண் இந்த நடனத்தை ஆடுவதை பார்த்ததிலிருந்து  அதில் பெரும் ஆர்வம் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

'நான் அந்த நடனத் தாரகையின் நடனத்தை பார்த்து மிகவும் வியந்தேன். எனது நண்பர்களை முழுமையாக மறந்துபோனேன். முழு இரவவும் அப்பெண்ணையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

'நானும் அந்த நடனத்தை ஆட முடியும் என எண்ணினேன். எனது நண்பர்கள் என்னைப் பார்த்து ஏளனம் செய்தனர். இது பெண்கள் ஆடும் நடனம் என அவர்கள் கூறினர். ஆனால் நான் உறுதியாக இருந்தேன். இக்கலையை கற்றுக்கொள்ள நான் விரும்பினேன்'  என அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் அவர் ஓர் ஆண் என்பதைக் கருத்தில் கொண்டு இக்கலையை கற்றுக்கொடுப்பதற்கு உள்ளூர் நடனப் பயிற்சிப் பாடசாலைகள் மறுத்துவிட்டன. அதனால் அவ் இளைஞன் வீட்டிலேயே வீடியோ உதவியுடன் இக்கலையை பயில்வதற்கு ஆரம்பித்தாராம். அதன் பின் ஸேஜியாங் மாகாணத்திற்கு இடம்மாறி அங்குள்ள  நடனப் பாடசாலையொன்றை அனுமதி பெற்றுள்ளர்.

5 வருடங்களில் அவர் முழுமையான போல் டான்ஸிங் நடனக் கலைஞராகிவிட்டார். மாதாந்தம் 10லட்சம் ரூபா வரை  வருமானம் பெறும் அவர், நடனப் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

'இந்த வாழ்க்கையை நான் முன்னர் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. பணம் முக்கியமல்ல. நான் இந்த நடனத்தை விரும்புகிறேன். இப்போதும் நான் ஆண் என்பதால் பலர் கூச்சலிடுகின்றனர். மெழுகுவர்த்திகளை எறிகின்றனர். ஆனால் போல்டான்ஸிங்தான் எனது வாழ்க்கை. நான் அதை விட்டுவிட மாட்டேன் என்கிறார் ஹா டோவா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .