Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 13 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது கணவனுக்கு மது போதையேற்றி அவரை கட்டிலில் கட்டிவைத்து ஆணுறுப்பை துண்டித்து குப்பையில் எறிந்த குற்றத்திற்காக பெண்ணொருவர் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்துப்பட்டுள்ளார்.
தெற்கு லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கத்தரின் பெக்கர் எனும் 48 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விபரிக்கையில், 'குறித்த பெண் வீட்டில் இரவு உணவின் போது அவரது கணவனை கொல்வதற்காக உணவில் நஞ்சை அல்லது போதைப்பொருளொன்றை கலந்துக் கொடுத்துள்ளார். அம்மனிதர் எழுந்து பார்க்கும்போது அவர் கட்டிலுடன் சேர்த்து கட்டப்பட்டு அசைய முடியாதவாறு கிடந்துள்ளார். அதன்பின் அவரது மனைவி கத்தியொன்றினால் அவரது ஆணுருப்பை துண்டித்து குப்பையை அழிக்கும் இயந்திரமொன்றில் எறிந்து அந்த இயந்திரத்தை இயக்கியுள்ளார்' எனத் தெரிவித்தனர்.
அதன்பின்பு அவசர சிகிச்சைப் பிரிவு இலக்கமான 911 தொடர்புக்கொண்டு அவசர மருத்துவ சிகிச்சை தேவை என கத்தரின் பெக்கர் கோரியுள்ளார்.
அதிகாரிகள் அங்கு விரைந்தபோது, 52 வயதுடைய மேற்படி நபர் இரத்தம் வழிந்தோடிய நிலையில் காணப்பட்டார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
பொலிஸார் அவ்வீட்டை சோதனைக்குட்படுத்தியப்போது கத்தியொன்றும் கயிறும் காணப்பட்டுள்ளது.
இருவரும் திருமணம் முடித்துள்ளனர். ஆனால் விவாகரத்து பெறுவதற்கான செயன்முறைகளை மேற்கொண்டுள்ளனர் என லெப். ஜெப் நைட்டிங்கேல் என்பவர் இது குறித்து தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் வீட்டிற்கு வந்து அம்மனிதரை பார்த்தபோது, 'அதற்கு அவர் தகுதியானவர்' என கத்தரின் கூறினாராம்.
இந்நபரின் அந்தரங்க உறுப்பு நிரந்தரமாக இழக்கப்படச் செய்வதை அப்பெண் நோக்கமாகக்கொண்டிருந்தார் என நைட்டிங்கேல் மேலும் தெரிவித்துள்ளார்.
மோசமான வன்முறை பிரயோகம், பெருங் குற்றச்செயலை மேற்கொள்ளும் நோக்குடன் போதையேற்றியமை, உயிர்ச்சேதம் விளைவிக்கக் கூடிய ஆயுததத்தால் தாக்கியமை, போன்றக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அப்பெண் தற்போது சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
pasu Wednesday, 13 July 2011 10:55 PM
என்ன பிரச்சினை என்று யாருக்கும் தெரியும்?
Reply : 0 0
jan Thursday, 14 July 2011 03:43 AM
பதிலுக்கு அவர் வெட்ட முடியாதே என்ற தைரியத்தில் செஞ்சுட்டால்போல....
Reply : 0 0
NAKKIRAN Thursday, 14 July 2011 10:03 AM
இப்படியான சம்பவங்களில் ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம். அவர்களுக்கு மன அழுத்தம் இருக்கிறது. இதன்மமூலம் வருக்கிற சட்ட, சமூக பாதிப்புகள் தெரியாது.
Reply : 0 0
jaliyuath Saturday, 16 July 2011 01:10 AM
எச்சரிக்கை நண்பர்களே நமது பெண்களும் இப்படிச் செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
Reply : 0 0
anaa Monday, 18 July 2011 07:23 PM
கவனித்தீர்களா முக்கிய பிரச்சினை. சுமுகமாக பிரிந்து விட முடியாமைதான் இதற்கு காரணமாம்.
Reply : 0 0
Ishthiyaque Friday, 05 August 2011 08:39 PM
வாலிபர்களே சிந்தித்து செயல்படவும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago