2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நாயை பின்தொடர முயன்று, வாயில் இடுக்குகளில் சிக்கிய சிறுமி

Kogilavani   / 2011 ஜூலை 06 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வீட்டு வாயில் தடுப்பின் இடுக்குகளில் வளர்ப்பு நாய் புகுந்து வெளியே செல்வதைக் கண்ட 4 வயது சிறுமி, அந்நாயை போன்றே தானும் செய்ய முயன்றபோது அச்சிறுமியின் தலை இடுக்குகளில் சிக்கிக்கொண்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

ராசெல் வாரென் எனும் இச்சிறுமியின் பெற்றோர் வீட்டில் திரைப்படமொன்றை பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அச்சிறுமி வெளியில் வருவதை அவதானிக்க மறந்துள்ளனர்.

நாயை பின்தொடர்ந்து வந்த அச்சிறுமி, நாய் வாயில் கம்பி இடுக்குகளுக்கூடாக நுழைந்து சென்றதை கண்டாள். அதை போன்று அச்சிறுமியும் செய்ய முயன்றபோது அவளின் தலை கம்பி இடுக்குகளில் சிக்கிக்கொண்டது.

அதன்பின் வீட்டிலிருந்து வெளியில் வந்த குழந்தையின் தாய் கரோலினா, சிறுமியை கம்பிகளின் இடுக்குகளிலிருந்து வெளியே எடுக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. அதன்பின் அவர் தீயணைப்புப் பிரிவினருக்கு அழைப்பை ஏற்படுத்தினார்.

கடை உரிமையாளரான வாரென் (வயது 32) இது தொடர்பில் தெரிவிக்கையில், 'ராசெல் நாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவள். அவளின் சத்தம் கேட்டு நான் வெளியில் வந்து பார்த்தபோது அவள் அந்த கம்பிகளின் இடுக்குகளில் சிக்கிக்கொண்டு இருந்தாள். நானும் எனது நண்பரும் இணைந்து அக்குழந்தையை கம்பிகளின் இடுக்குகளிலிருந்து வெளியில் எடுக்க முயன்றோம். ஆனாலும் முயற்சி வெற்றியளிக்கவில்லை. நாம் பின் தீயணைப்புப் பிரிவிக்கு அறிவித்தோம்' எனக் கூறியுள்ளார்.

'ஆரம்பத்தில் அவள் குழப்பமடைந்தாள். பின்னர், நான் 'பயர்மேன் சாம்' (பிரிட்டனில் ஒளிபரப்பாகும் ஒரு சிறார்களுக்கான அனிமேஷன் தொடர்)  வந்துகொண்டிருப்பதாக கூறியவுடன் அவள் அமைதியானாள். தீயணைப்பு வீரர்கள் வாகனத்திலிருந்து இறங்கியபோது, ஏனைய கதாபாத்திரங்கள் எங்கே என்று அவள் கேட்டதை நினைக்க சிரிப்பு வருகிறது' எனவும் வாரென் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .