2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்த அழகி மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு

Kogilavani   / 2011 ஜூலை 05 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆஸ்திரியாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் நகர மத்தியில் உள்ளாடைகளுடன் பெஷன்  விளம்பரமொன்றுக்கு போஸ் கொடுத்ததால் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

கதி ஸ்டேய்ன்ஞர் எனும் 26 வயதான தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்  மொடலாகவும் பணியாற்றுபவர்.  அண்மையில் ஆஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் பல இடங்களில் நின்று பல்வேறு கோணங்களில் புகைப்படங்களுக்கு போஸ்கொடுத்தார். இதனால் பார்வையாளர்கள் இவரை சூழத்தொடங்கினர்.

இவர் ஏராளமானோரை கவர்ந்த போதிலும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் சிலர் இது பாலியல் தொந்தரவு ஏற்படுத்தும் நடவடிக்கை என அமெரிக்க தூதுவரகத்திற்கு புகாரிட்டுள்ளனர்.

அதன்பின் வியன்னாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளால் ஆஸ்திரியா பொலிஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் கதி ஸ்டேய்ன்ஞர்  தெரிவிக்கையில் 'இக்குற்றச்சாட்டை  முதலில் நகைச்சுவை என்றே கருதினேன். ஆனால் பின்னர் பெரும் ஆச்சரியமடைந்தேன்' எனத் தெரிவித்தார்.

'இக்குற்றச்சாட்டை என்னை வியப்படையவைத்தது. நீச்சல் தடாகத்தில் இருப்பவர்களைவிட அதிகமான ஆடைகளை நான் அணிந்திருந்தேன்.

அமெரிக்கர்கள் தாராளமானவர்கள் என நான் எண்ணினேன். ஏனெனில் நான் நியூயோர்க்கில் 5 வருடங்கள் வசித்துள்ளேன். துரதிஷ்டவசமான இந்த குற்றச்சாட்டு விரைவில் மறைந்துவிடும் என நம்புகிறேன்' என அவர் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .