2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நீச்சல் உடையுடன் போட்டிகளில் பங்குபற்றும் மகளிர் கால்பந்து அணி

Kogilavani   / 2011 ஜூலை 01 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யாவின் பிரபல மகளிர் கால்பந்தாட்ட அணியொன்றின் வீராங்கனைகள் ரசிகர் கூட்டத்தை அதிகரிப்பதற்காக நீச்சல் உடையுடன் கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

அண்மைக்காலமாக அவ்வணிக்கான ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்திருந்தது.  அணியின் வருமானமும் குறையத் தொடங்கியது.  இந்நிலையிலேயே மேற்படி அதிரடித் தீர்மானத்தை அவ்வீராங்கனைகள் மேற்கொண்டுள்ளனர்.

மொஸ்கோவிற்கு அண்மையில் உள்ள கிராஸ்னோயர்மேயஸ்க் எனும் நகரைச் சேர்ந்த எவ்.சி. ரோஸியான்கா என்ற இக் கால்பந்தாட்டக் கழகம் ஆண்கள் கால்பந்தாட்டத்திற்கு ஈடாக ரசிகர்களை ஈர்ப்பதற்கு திணறியது. ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவ்வணி வீராங்கனைகள் உறுதியெடுத்தனர்.

1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எவ்.சி.ரோஸியான்கா கழகம் ரஷ்யாவின்  பெண்களுக்கான பிரிமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் 3 தடவைகள் (2005,2006,2010)  தொடர்ந்து சம்பியனாகியது. மற்றம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட  பெண்களுக்கான சம்பியன் லீக் போட்டிகளுக்கும் இரண்டு தடவைகள் தகுதி பெற்று நான்காவது சுற்றுவரை முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.

'இக்கழகம் பல வெற்றிகளைப் பெற்றாலும் கீழ்நிலை அணியாகவே நோக்கப்படுகின்றது. இந்த அதிரடித் தீர்மானம் நிதியை திரட்டுவதற்கு உதவும் என நம்புகிறோம்' என  இக்கழகத்தின் பயிற்றுநர் டாட்யானா இகரோவா  தெரிவித்துள்ளார்.

'நாங்கள்தான் ரஷ்யாவின் மிகச் சிறந்த மகளிர் கால்பந்தாட்ட அணி.  பல போட்டிகளில் சம்பியனாகியுள்ளோம். ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் மகளிர் சம்பியன் லீக் போட்டிகளிலும் பங்குபற்றினோம்.

ஆனால் அதிகமான மக்கள் நாங்கள் கூறுவதை கேட்பதில்லை. அதிகமானவர்கள் எங்களது விளையாட்டுக்களை பார்ப்பதற்கு வருவதில்லை. அதனால் நாங்கள் நீச்சல் உடை அணிந்து போட்டிகளில் பங்குபற்ற தீர்மானித்துள்ளோம்.  இதன் மூலம் ரிக்கெற்றுகளை விற்பனை செய்ய முடியுமென நாங்கள் நம்புகிறோம்.

எங்களது விளையாட்டு வீராங்கனைகள் மிகவும் அழகானவர்கள், சிறந்த விளையாட்டு வீர்hங்கணைகள், வெற்றி பெற உறுதிபூண்டுள்ளவர்கள்' என டாட்யானா கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • riyas Saturday, 02 July 2011 02:42 PM

    மேற்கத்திய நாடுகள் நிர்வாண நாடுகளாக மாறிக்கொண்டு செல்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .