2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

விமானங்களை தாமதிக்கச் செய்த ஆமைகள்

Kogilavani   / 2011 ஜூலை 01 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விமான நிலையமொன்றில் ஆமைகள் புகுந்ததனால் டசன் கணக்கிலான விமானங்களின் பயணம் இடையூறுக்குள்ளாகிய சம்பவம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

நியூயோர்க் ஜோன் எவ்.கென்னடி விமான நிலையத்தில் சுமார் 150 ஆமைகள்  முட்டையிடுவதற்கு இடம் தேடி விமான நிலையத்திற்குள் புகுந்தன.

விமான ஓடுபாதையில் ஆமைகள் ஊர்ந்ததால்  விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேறு ஓடுபாதையினூடாக விமானங்களை நகர்த்த நிர்ப்பந்திக்கப்பட்டனர்

பரபரப்பான காலை வேளையில் ஆமைகள் ஒடுபாதையில் தென்பட்டமை குறித்து விமானிகள் பலர் புகாரிட்டனர்.

'நாங்கள் இயற்கை அன்னைக்கு அடி பணிந்தோம். ஊழியர்கள் ஆமைகளை எடுத்துச் சென்று விமான நிலையத்திற்கு அப்பால் விட்டனர்' என நியூயோர்க் மற்றும் நியூஜேர்சியில் விமான நிலைய அதிகாரசபையின் பேச்சாளர் ரோன் மரிஸ்கோ தெரிவித்துள்ளார்.

இதனால் விமானங்கள் பல சராசரியாக 30 நிமிடங்கள் தாமதித்துள்ளன.

நாங்கள் காட்டு விலங்குகளுக்கு உதவுவதற்கு முயற்சிக்கிறோம். அவை பல சந்ததிகளாக வாழ்ந்த இடத்தில் நாம்  இவ்விமான நிலையத்தை கட்டியுள்ளோம். எனவே அவற்றுக்கு உதவுவது அவசியம் என எண்ணுகிறோம்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .