2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கழிவறை கடதாசிகளை திருடிய நபர் கைது

Kogilavani   / 2011 ஜூன் 30 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நகர தொழிலாளர் ஒருவர் 20 இற்கும் அதிகமான கழிவறைக் கடதாசிச் சுருள்களை  அவர் பணியாற்றும் நிறுவனத்திடமிருந்து திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

மசாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த டேவிட் பின்காம் என்பவரே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட நபர் நகர சபைக் கட்டிடத்திற்குள் வெறுங்கையுடன் நுழைவதும் வெளியேறும்போது கைப் பெட்டியொன்றுடன் வருவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த வீடீயோ ஒளிநாடாவில் பதிவாகியுள்ளது.

அதன்பின்பே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது அந்நபரின் காற்சட்டைக்குள் இருந்து மேலும் 6 கழிவறை கடதாசிச் சுருள்கள் கைப்பற்றப்பட்டன.

தான் இப்படி செய்தமை இது முதல் தடவையல்ல எனவும் இதற்கு முன்பு 5 அல்லது 6 தடவை கழிவறை கடதாசிகள் உட்பட பல பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

250 டொலர்களுக்கு மேல் பெறுமதியான பொருட்களை திருடியதாக டேவிட் பின்காம் மீது  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .