Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 30 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள கிராமமொன்றில் இரண்டு வயது குழந்தை உட்பட சிறார்களுக்கு பால் கொடுப்பதற்கு பதிலாக மது வழங்கப்படும் காட்சிகளை ஆந்திர மாநிலத்தின் தொலைக்காட்சியொன்று பதிவுசெய்துள்ளது.
பால் மற்றும் இதர உணவுப் பொருட்களை கொடுத்து தமது குழந்தைகளை பராமரிப்பதற்கு போதிய வசதிகள் இன்மையால் மேற்படி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் 'கள்' அருந்தக்கொடுக்கின்றனர்.
ஆந்திரபிரதேசத்தின் மாஹுபுநகர் மாவட்டத்திலுள்ள பழங்குடியிலேயே இக்காட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அங்குள்ள பெற்றோர்கள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மதுவை தமது குழந்தைகளுக்கு வழங்கி குழந்தைகளை உறங்க வைக்கின்றனர் என ஐ நியூஸ் எனும் அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் வெளியில் தொழிலுக்குச் செல்வதற்கு இலகுவாக அமைகிறது என அந்த தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
5 வயது குழந்தையொன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பியர் அருந்திக் கொண்டிருந்தை கண்டதாக செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில கிராமங்களை சென்றடைவதிலுள்ள சிரமம் காரணமாக பால் முதலானவற்றை விநியோகிப்பது கடினமாகவுள்ளதாக அப்பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை சில பழங்குடி இனத்தவர்கள் தமது குழந்தைகளுக்கு கள் அருந்தக் கொடுப்பதை தமது பாரம்பரிய வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனவும் மேற்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
RosH Friday, 01 July 2011 05:45 PM
என்ன வாழ்கடா இது.
Reply : 0 0
zih Saturday, 02 July 2011 05:55 PM
குழந்தைகள் பெற்றோர்களின் சொத்துக்கள் அல்ல, தான் நினைத்தவாறு வளர்ப்பதற்கு, அவை இறைவனால் வழங்கப்பட்ட அமானிதங்கள் எனும் கொள்கை இவர்களை போன்றோரை சென்றடைய இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ?.... இறைவன்தான் அறிவான்.
Reply : 0 0
Rikas Wednesday, 19 October 2011 03:21 AM
இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago