2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

குறட்டை ஒலியை தடுப்பதற்கான அறைகளை நிர்மாணிக்கும் ஹோட்டல்

Kogilavani   / 2011 ஜூன் 29 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லண்டனிலுள்ள ஹோட்டலொன்று குறட்டை ஒலியிலிருந்து விடுபட்டு மெய்மறந்து தூங்குவதற்கு ஏற்;ற வகையில் நவீன வசதிகளுடன் கூடிய அறையொன்றை பரீட்சித்து வருகிறது.

கிறவுன் பிளாஸா எனும் இந்த ஹோட்டல்  பல்வேறு தொழில்நுட்பங்களையும் உபாயங்களையும் இதற்காக பயன்படுத்துகிறது.

அந்த ஹோட்டலில் பரீட்சிக்கப்படும் குறித்த அறை, ஒலி ஊடுருவாத தன்மையைக் கொண்ட சுவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. விசேட பஞ்சுகளால் அமைக்கப்பட்ட இந்த சுவர்களால் குறட்டை ஒலி அறையை அதிரச்செய்யாமல் தடுக்கும்.

அதேவேளை கட்டிலின் தலைப்பக்கமுள்ள பலகை குறட்டையினால் ஏற்படும் எதிரொலிகளை தடுக்கும்.

குறட்டை தடுப்பு தலையணைகளும் கட்டிலில் உள்ளன. அத்துடன் பொதுவாக மல்லாக்காக படுத்து உறங்கும்போது குறட்டை ஏற்படுவதால் வாடிக்கையாளர்கள் பக்கவாட்டில் படுத்துறங்குமாறு கோரப்படுகின்றனர்.

இந்த ஹோட்டலின் லண்டன் கிளையிலும் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலுமுள்ள ஏனைய 9 ஹோட்டல்களிலும்  ஒருவாரமாக சோதனை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலின் பேச்சாளர் ஒருவர் இதுத் தொடர்பில் குறிப்பிடுகையில், ' சகாவின் குறட்டைச் சத்தத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு தலையணைக்கடியில் தலையை புதைத்துக்கொள்ளும் நிலை  இனி இல்லை. இரவு முழுவதும் விழித்திருப்பதைப் போன்ற மோசமான நிலை வேறு இல்லை. அதனால்தான் நாம் இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.

விடுமுறைக் காலங்களில்  உல்லாசமாக இருக்க வந்த 1000 பேரிடம் நடத்திய ஆய்வில் சுமார் அரைவாசி பேர்  தங்களது துணையின் குறட்டை சத்ததால் காலம் வீணாகிப்போனதாக குறை கூறியுள்ளமை தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .