2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தற்கொலைக்கு முயன்ற இளைஞனை முத்தத்தின் மூலம் காப்பாற்றிய யுவதி

Kogilavani   / 2011 ஜூன் 27 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவரை முத்தம் கொடுத்து காப்பாற்றியதன் மூலம் யுவதியொருவர்  பெரும் புகழ் பெற்றுள்ளார்.

லியூ வென்க்ஸியூ எனும் 19 வயதான யுவதியே இவ்வாறு முத்தத்தின் மூலம் இளைஞர் ஒருவரை காப்பாற்றி புகழ்பெற்றுள்ளார்.

சீனாவின் காங்டோங்  மாகாணத்தில் சென்சென் எனும் நகரில், இந்த யுவதி பொருட்களை  வாங்குவதற்காக தனது நண்பிகளுடன் கடைத் தொகுதியொன்றுக்குச் சென்றுள்ளார். அங்கே குழுமியிருந்த பலர் கட்டிடத்தின் மேல் தளத்தல் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவரை பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கு பெரும் பரபரப்பு நிலயவியது.

அருகில்  பார்த்தபோது, இளைஞனொருவன் கட்டிடத்தின் மேல் தளத்திலுள்ள தடுப்புச் சுவர் அருகே நின்றவாறு தனது மார்ப்புக்கு நேராக கத்தியை வைத்தவாறு காணப்படுவதையும், அவரது செயற்பாட்டை கண்ணுற்ற போதும்  ஒருவரும் தடுப்பதற்கு முன்வராததை லியூ வென்க்ஸியூ அவதானித்துள்ளார்.

அவர் பொலிஸாரிடம் உரையாடிவிட்டு இளைஞனின் அருகில் சென்று கதைத்தார்.

'எனக்கு அந்த இளைஞனை காப்பாற்ற வேண்டும் போல் தோன்றியது. ஆனால் பொலிஸார் அதற்கு அனுமதிக்கவில்லை. அதனால் அந்த இளைஞன் என்னுடைய காதலன் என்றும் அவன் எனக்காகவே தற்கொலை செய்துக் கொள்ள போகின்றான் என்றும் பொலிஸாரிடம் பொய் கூறினேன்.

'அதன்பின் அவ் இளைஞனுடன் பேசுவதற்கு அவர்கள் என்னை அனுமதித்தனர். அவ்விளைஞன் தனது குடும்பம் பிளவுற்றதால் தான்கவலையாக இருப்பதாகவும் அதனால் இம் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தான்' என லியூ வென்க்ஸி  பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அந்த இளைஞன் கூறியதை கேட்ட லியூ ஒரு அடி முன்னால் சென்று அவனது இரு கைகளையும் பற்றியதுடன் முத்தமொன்றையும் கொடுத்தார். இவரது செயற்பாடு அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளியதுடன், அந்த இளைஞனுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தீயனைப்பு படைவீரர் ஒருவர் அந்த இளைஞனை தடுப்புச் சுவரிலிருந்து வெளியில் இழுத்து எடுத்தார்.
'அவனது வாழக்கை வரலாறு எனது மனதை மிகவும் தாக்கிவிட்டது. நான் உண்மையில் அவனது காதலியாகவே என்னை உணர்ந்தேன். என்னால் அவனுக்கு உதவி செய்ய முடியும் என்று நினைத்தேன்' என லியூ வென்க்ஸியூ மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Mohamed Haleem Tuesday, 05 July 2011 08:54 PM

    இது ஒரு சிறந்த சேவை. வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .