Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 27 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவர் தனது விவாகரத்தை மிக விமர்சையாக கொண்டாடிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. இவர் தனது சந்தோசமற்ற 27 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததைடுத்து இவ் விவாகரத்து நிகழ்வை கொண்டாடியுள்ளார்.
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் தலைநகரமான தையுவானிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இவ்விழாவை யுவான் லீ எனும் இப்பெண் ஏற்பாடு செய்திருந்தார்.
அன்றைய தினம் மேற்படி யுவான் லீயும் அவரது 3 பிள்ளைகளும் அவர்களது தொடர்மாடி குடியிருப்பிலிருந்து காரொன்றின் மூலமாக யுவான் லீயின் தாயின் வீட்டிற்கு முதலில் சென்றனர்.
'நான் எனது வீட்டிலிருந்து 28 வருடங்களுக்கு முன்பாக எனது கணவரால் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டேன். தற்போது நான் பெருமையுடன் வீடு திரும்பியுள்ளேன்' என்று அப் பெண் தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் விவாகரத்து வைபவம் நடைபெறும் ஹோட்டலுக்குச் சென்றனர்.
'விவாகரத்து வைபவம் இப்போது ஆரம்பமாகிறது' என அறிவிப்பாளர் மகிழ்ச்சியுடன் அறிவிக்க விழா தொடங்கியது.
பிரதான மேடையில் நின்று யுவான் லீ 'இந்த விவாகரத்து வைபவம் என்னை மகிழ்வூட்டுகின்றது. இது கடந்த காலத்திற்கான விடுதலை நாள். இனி நான் மகிழ்வுடன் எனது பிள்ளைகளுக்காக வாழ்வேன்' என தெரிவித்தார்.
திருமண உறுதிமொழிக்குப் பதிலாக விவாகரத்து உறுதிமொழி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அறிவிப்பாளர், யுவான் லீயிடம், 'யார் மீது அன்பு செலுத்துவதற்கு உங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தீர்களோ இன்றிலிருந்து உங்கள் வாழ்க்கையில் அவருக்கு எந்த பங்குமில்லை. செல்வச் செழிப்பிலும் ஏழ்மையிலும் ஆரோக்கியத்திலும் துரத்தப்பட்டாலும் நேசிக்கப்பட்டாலும் அவருடன் உங்களுக்கு எந்த உறவுமிருக்காது : இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?' எனக் கேட்டார்.
அதற்கு யுவான் லீ 'நான் ஏற்றுக்கொள்கிறேன்' என பதிலளித்தார்.
பின்னர் யுவான் லீ, மேடையிலிருந்த தனது திருமண புகைப்படங்களை கிழித்தெறிந்ததுடன், அவரது திருமண மோதிரத்தையும் மீன் தொட்டிக்குள் தூக்கியெறிந்து, திருமண வாழ்க்கையிலிருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago