2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பெண்களின் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்து விமானத்தில் பயணம் செய்த ஆண்

Kogilavani   / 2011 ஜூன் 23 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்கள் அணியும் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்தவாறு பயணியொருவர்  விமானத்தில் அனுமதிக்கப்பட்டமைக்காக அமெரிக்க விமான நிறுவனமொன்று விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்நபர், பெண்களின் உள்ளாடைகள், ஸ்டொக்கிங்ஸ், குதி உயர்ந்த பாதணிகள் என்பவற்றை அணிந்த நிலையில் புளோரிடா மாநிலத்திலிருந்து விமானத்தில் பீனிக்ஸ் நகருக்குப் பயணம் செய்துள்ளார்.

இக்காட்சியை ஜில் டார்லோ எனும் பெண் பயணியொருவர் படம்பிடித்து அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னரே தானும் ஏனைய சில பயணிகளும் அந்த நபர் குறித்து விமானசேவை நிறுவன ஊழியர்களிடம் புகாரிட்டதாகவும் ஆனால் குறித்த நபர் விமானத்தில் பயணம் செய்வதை  யூ.எஸ்.எயார்வேஸ் ஊழியர்கள் தடுக்கவில்லை எனவும் டார்லோ கூறியுள்ளார்.

இம் மனிதரை நான் படம் பிடித்திருக்காவிட்டால்  நான் சொல்வதை ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள் என்கிறார் 40 வயதான டார்லோ.
ஆனால் யூ.எஸ்.எயார்வேஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தனது நிறுவன ஊழியர்கள் சரியாகவே செயற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எம்மிடம் ஆடை ஒழுங்குவிதிகள் எதுவுமில்லை. அவரின் அந்தரங்க பாகங்கள் எதுவும் தென்பட்டிருந்தால் அது பொருத்தமற்ற நடவடிக்கையாக கருதப்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால் அத்தகைய பயணிகள் அனுமதிக்கப்படுவர்  என மேற்படி பெண் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .