Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 17 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பர்மார்கெட் ஒன்றில் பொருட்களின் விலை மற்றும் விலைக்கழிவுகள் தொடர்பான அறிவித்தல்கள் வெளியிடப்படும் அகன்ற திரையில் திடீரென ஆபாசப்படம் காட்டப்பட்டதால் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
ட்ரெஸ்டன் நகரிலுள்ள மேற்படி சுப்பர்மார்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்கள் திரையில் எப்போதும் பொருட்களின் விலைகள், மற்றும் சலுகைகள் குறித்த பட்டியலையே பார்வையிடுவர். ஆனால் ஒருநாள் வழமைக்கு மாறாக அத்திரையில் ஆபாசப்படம் ஓடியது.
இதனைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக விரைந்து அந்த இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்திவிட்டனர்.
இந்தத் திரையை இயக்கும் கணினி வலையமைப்புக்குள் யாரோ ஊடுருவி ஆபாசப்படத்தை திரையிடச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வர்த்தக நிலைய ஊழியர் ஒருவர் மேசையொன்றின் மீதேறி இயந்திரத்தின் ஆழியை நிறுத்தியபோதுதான் அந்த ஆபாசப்படக் காட்சி முடிவுக்கு வந்தது என வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
xlntgson Saturday, 18 June 2011 09:16 PM
விளையாட்டு வினையாகும்!
இலங்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருக்கின்றன! ஒரு பொலீஸ் அதிகாரியும் சண்டைப்படம் என்று எண்ணி வந்திருக்கிறார் பார்க்க, சாதாரண உடையில், வசமாக மாட்டிக்கொண்டனர், அரங்க முகாமை & காட்சி ஓட்டுனர்! சட்டம் ரொம்ப கடுமையே...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago