Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 07 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவையாக கோழி இறைச்சி பொரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற தாய்லாந்தைச் சேர்ந்த சமையல் நிபுணர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் தனது கைகளை விட்டு கோழி இறைச்சி பொரித்து வியக்கவைக்கிறார்.
தாய்லாந்தின் சியாங் மேய் நகரைச் சேர்ந்த டிரிச்சன் (வயது 50) என்ற இந்நபர் வழமையாக சமையல் வேலைகளில் ஈடுபடும்போது சமையல் பாத்திரங்களை மறந்துவிடுவார். கரண்டிக்கு பதிலாக அவர் தனது கைகளை கொதிக்கும் எண்ணையில் இட்டு பதம் பார்ப்பார். ஆனால், அவரின் கைகளில் எரிகாயங்களோ, கொப்புளங்களோ இதுவரை ஏற்படவில்லை.
விருந்துபசாரமொன்றில், 480 பாகை பரனைற்றில் கொதிக்கும் எண்ணெயிலிருந்து 20 துண்டு கோழிகளை அவர் தனது கைகளால் எடுத்து புதிய கின்னஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இவ்வாறான திறமை தமக்கிருப்பதை கடந்த 7 வருடங்களுக்கு முன்பே அவர் கண்டறிந்துள்ளார்.
'ஒரு நாள் நான் சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அணிலொன்று மாங்காயொன்றை பறித்து கொதித்த எண்ணெயில் எறிந்தது. அவ்வேளை எனது உடல் முழுதும் கொதிக்கும் எண்ணெய் தெறித்தது. நான் உடனே கண்ணாடிக்கு முன்பு சென்று பார்த்தேன். ஆனால் எனது உடலில் காயம் இருப்பதற்கான அடையாளம் கூட இருக்கவில்லை. அந்த எண்ணெய் தெறித்த வேகத்தில் என் உடல் முழுதும் பலத்த காயங்களுக்குள்ளாகியிருக்க வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.
'தற்போது அரிசி கோழி, மற்றும் பல பொருட்களை எனது வெறும் கைகளால் எண்ணெயிலிட்டு பொரித்தெடுக்க முடியும்' என்கிறார் அவர்.
பாங்கொக்கிலிருந்து 470 மைல்கள் தொலைவிலுள்ள சியாங் மேய் நகரின் தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகிலுள்ள அவரின் உணவு விடுதியில், டிரிச்சினின் 'கைகளால் பொரித்த' உணவுகளை வாங்குவதற்காக வெகு தொலைவிலிருந்தும் பெருந்திரளானோர் வருகின்றனராம்.
'மக்கள் அதை மிக விரும்புகின்றனர். இதை போன்ற செயலை அவர்கள் இதுவரை கண்டதில்லை' என டிரிச்சின் கூறுகிறார்.
3roses Tuesday, 07 June 2011 10:56 PM
எப்படி உங்களால் மட்டும் முடிகிறது?
Reply : 0 0
Hot water Thursday, 09 June 2011 02:31 AM
இவர் செய்வது சாகசமாக இருக்கலாம். அது பாதுகாப்பு, சுகாதார ரீதியில் பொருத்தமானதா என்பதே என் கேள்வி.
Reply : 0 0
dhanabal Sunday, 18 March 2012 12:53 PM
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கு. அதை பயன்படுத்தி உள்ளார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
41 minute ago