2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

முறையற்ற உறவில் குழந்தைகள் பெற்ற அண்ணன் - தங்கை நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்

Kogilavani   / 2011 மே 24 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சகோதரியுடனான முறையற்ற உறவு மூலம் 4 குழந்தைகளுக்கு தந்தையான ஜேர்மனிய நபர் ஒருவர், தகாத உறவு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டதால் நஷ்டஈடு கோரி மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

ஜேர்மன் அரசாங்கத்தினால் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன் லீப்ஸிக்கைச் சேர்ந்த பட்ரிக் ஸ்டபிங் (வயது 34) என்பவரே இவ்வாறு தனது இளைய சகோதரி சுசானுடனான (24)  உறவின் மூலம் 4 குழந்தைகளை பெற்றுக்கொண்டமை கண்டறியப்பட்டது.

சிறுவயதிலேயே பட்ரிக் மற்றொரு குடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் அவர் தனது சொந்த குடும்பத்தினரை முதல் தடவையாக பார்க்கச் சென்றபோது அங்கு தனது தங்கையான சுசானுடன் காதல் கொண்டுவிட்டார்.

கடந்த 7 வருடங்களாக இவர்கள் காதலர்களாக உள்ளனர். இவர்களுக்கு 4 பிள்ளைகளும் பிறந்தனர்.

இதனால் பட்ரிக்கிற்கு எதிராக தகாத உறவு சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில் பட்ரிக்கிற்கு 3 வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இத்தண்டனைக்கு எதிராக பட்ரிக் ஸ்டபிங் சுசானும் 36,000 யூரோ நஷ்ட ஈடு கோரி மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வழக்கின் தீர்ப்பை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் இந்தவாரம் வெளியிடவுள்ளது.

இத்தீர்ப்பு ஐரோப்பாவின் பல நாடுகளிலுள்ள இதுபோன்ற சட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ரிக், சுசான்  ஆகியோரின் தாய், தந்தை இருவரும் ஏற்கெனவே காலமாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • asker siddeek Wednesday, 25 May 2011 06:20 PM

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் வாழ்க வாழ்க!!!!!!!

    Reply : 0       0

    xlntgson Wednesday, 25 May 2011 10:28 PM

    நல்ல குடும்பம் இதுவா? நல்ல நையாண்டிதான் போங்கள். asker siddeek விளையாட்டுக்கேனும் அவ்வாறு கூறாதீர்கள்! இது குரங்குக் குடும்பம், மனித ரூபம்! குரங்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்யலாம் இவர்கள்! குரங்குகள் கோபித்துக் கொள்ளாமல் இருக்குமோ தெரியாது.
    அவைகூட பிள்ளைகளை முதுகில் சுமந்து வளர்க்கின்றன உறவை முறித்துக் கொள்ளும் வரை
    அவற்றுக்கு வெவ்வேறு முக அடையாளங்களும் இல்லை. ஒன்றைப் பார்த்தாற்போல் தான் இருக்கின்றன. தொலைந்து போனால் சிம் இல்லாவிட்டால் தேட இயலாது.குரங்குகளை மன்னிக்க போதுமான காரணங்கள் இல்லாமல் இல்லை!

    Reply : 0       0

    Rocket Thursday, 26 May 2011 10:59 PM

    மிருகங்களை விட கேவலம் பிடித்தவர்கள். மனித உரிமை என்ற பெயரில் நாய் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

    Reply : 0       0

    Hijaz Saturday, 28 May 2011 06:42 PM

    இப்படிப்பட்டவர்களை சிறையில் அடைத்து பாடம் புகட்டுவது சரியான முடிவு.

    Reply : 0       0

    maroof Saturday, 28 May 2011 10:03 PM

    this is the western civilisation which we want to adopt in our society in the name of freedom and preggress.

    Reply : 0       0

    fahmy Wednesday, 01 June 2011 03:39 AM

    ஒரு நோக்கத்தின் அடிப்படையில் படைக்கப்பட்ட மனித இனம் குறித்த தவணை வரையில் இப்பூமியில் நடமாடும் தவணை முடிந்ததும் இப்புமியும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் அழிந்தொழியும் . மனிதன் வாழ்வதற்கு சரியானதும் பொருத்தமானதுமான வழிகாட்டல் தேவை பிழையான வழிகாட்டல் பிழையான நடத்தைகளையும் ,மோசமான விளைவுகளையும் தோற்றுவிக்கும் இதுதானுன்மை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .