2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பயணிகள் ரயிலில் குதிரையை ஏற்றிச் செல்ல முயன்ற நபர்

Kogilavani   / 2011 மே 19 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பயணிகள் ரயிலில் தனது குதிரையையும் ஏற்றிச் செல்ல வேண்டும் என ரயில் அதிகாரிகளுடன் ஒருவர் வாக்குவாதப்பட்ட சம்பவம் பிரிட்டனின் ரெக்ஸ்ஹாம் ரயில் நிலையத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

குதிரையை கட்டி இழுத்துவந்த மேற்படி நபர், குதிரைக்கும் சேர்த்து பயணச் சீட்டை பெற்றுக்கொள்ள முயன்றார்.

இவ்வாறு குதிரைகள் ரயிலில் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என ரயில் நிலைய அதிகாரி தெரிவிதுள்ளார்.

ரயில் நிலையத்தில் ஹொலிஹெட் என்ற ரயில் தரித்து நின்றபோது குறித்த மனிதர் தனது குதிரையையும் இழுத்துக்கொண்டு ரயிலில் ஏறுவதற்கு முற்பட்டுள்ளார். ஆனால் ரயில் நிலைய வழிநடத்துனர் அந்த குதிரையை அனுமதிப்பதை தடைசெய்துள்ளார்.

ஆனால், அதற்கு அவர் 'எனக்கு விதிமுறைகள் தெரியும்' என்று கூறிவிட்டு தூரத்தை நோக்கி நடந்துள்ளார். பின்னர் அவர் பலரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் குதிரையை அழைத்துக்கொண்டு ரயில் பிளட்போம் பகுதியை அடைந்துள்ளார்.

அவர் செல்ல வேண்டிய ரயில் வந்தவுடன்  குதிரையையும் அழைத்துக் கொண்டு ரயிலில் ஏற முயன்றுள்ளார். ஆனால், அந்த முயற்சியை ரயில் நிலைய அதிகாரியொருவர் தடுத்துவிட்டார்.

இது தொடர்பாக ரயில்வே பேச்சாளர் ஒருவர் கூறுகையில், 'உயிருள்ள மிருகங்களை ரயிலில் அழைத்துச் செல்வதற்கு பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சிறிய மிருகங்களான நாய் போன்றவற்றை அழைத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். ஆனால், மிகப் பெரிய மிருகங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. ஏனெனில் அது பயணிகளுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும்' எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .