Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 மே 11 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில், தேநீர் கடையொன்றின் முன்னால் 'அழகிய மார்பகங்களை உடைய பெண்கள் தேவை' என விளம்பரப் பலகை நாட்டி வைக்கப்பட்டதையடுத்து அந்த தேநீர் கடையை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'கிரான்ட் வியூ' என்ற தேநீர் கடை 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அரை நிர்வாண தோற்றத்துடன் இருக்கும் ஆண் , பெண் ஊழியர்களால் நன்கு கவனிக்கப்படுவார்கள் என விளம்பரப்படுத்தப்பட்டதன் மூலம் தலைப்புச் செய்திகளில் இந்த தேநீர் கடையின் பெயர் இடம்பெற்றது.
மெய்ன் மாநிலத்தில் 5000 மக்களைக் கொண்ட வஸல்பரோ நகரில் இக் கடை அமைந்துள்ளது. டொப் லெஸ் பெண்கள் பணியாற்றும் இக்கடைக்கு ஆரம்பத்திலிருந்தே மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 2008 ஆம் ஆண்டு தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.
எனினும் கடந்த வாரம் வரை அக் கடை எதிர்ப்புக்கு மத்தியிலும் இயங்கிவந்தது. ஆனால் கடைக்கு வெளியில் மேற்படி விளம்பர பலகையை வைத்ததையடுத்து எதிர்ப்பு அதிகமாகியது.
நகர நிர்வாகிகள் இந்த விளம்பர அறிவித்தல் சட்டவிரோதமானது என அறிவித்தனர்.
இக்கடையின் உரிமையாளரான டொனால்ட் கிறேப்ட்ரி இது குறித்து கூறுகையில் 'நான் வேடிக்கைக்காக இதைச் செய்தேன். ஆனால் தற்போது எனது புன்னகை பறிபோயுள்ளது' எனக் கூறியுள்ளார்.
'இரு வருடங்களாக நான் போராடினேன். ஆனால் சிலர் எனக்கெதிராக சதி செய்துள்ளனர். இம் மக்கள் எனது கடையை மூடச் செய்வதில் விடாப்பிடியாக இருந்துள்ளனர். அவர்கள் என்னை மாத்திரம் இலக்கு வைத்து இதைச் செய்துள்ளனர். நானும் ஏனையோரைப் போலவே வாழ விரும்புகிறேன்' என அவர் கூறியுள்ளார்.
ஆனால் நகரின் சட்டங்களுக்கு முரணாக இந்த விளம்பரப் பலகை இருப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து கடையை மூடும் நிலைக்கு கிறேப்ட்ரி தள்ளப்பட்டுள்ளார்.
satheek ali Thursday, 12 May 2011 06:52 AM
அவங்களா திருத்தவே முடியாதப்பா.............
Reply : 0 0
xlntgson Thursday, 12 May 2011 08:51 PM
அவங்களா திருந்த மாட்டாங்கப்பா!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
48 minute ago
2 hours ago