2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சேவல்- கோழி செக்ஸ் உறவுக்கு அமெரிக்க நகரில் புதிய சட்டம்

Kogilavani   / 2011 மே 02 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கோழியும் சேவலும் எப்படி மற்றும் எப்போது செக்ஸ் உறவு கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக புதிய சட்டவிதிகளை அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி மாநிலத்திலுள்ள நகரமொன்று ஏற்படுத்தியுள்ளது.

ஹோப்வெல் நகர நிர்வாகிகள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டவிதியின்படி அரை ஏக்கர் நிலம் கொண்டவர்கள் அவற்றில் 6 கோழிகள் வரை வளர்க்கலாம்.

சேவல்களும் கோழிகளும்  வருடத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே செக்ஸ் உறவு கொள்ள முடியும்.

அத்துடன் ஜோடி சேருவதற்கு முன் கோழிகள் தமக்கு  தொற்றுநோய் எதுவுமில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமாம்.  ஜோடி சேரும்போது அதிக சத்தமிடவும் கூடாது.

இந்த சட்டத்தினை ஹோப்வெல் நகர சபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாக உள்ளூர் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

இவர்கள் உண்மையாகவே கோழிகளை பற்றி பேசுகிறார்களா அல்லது வேறு அர்த்தத்தில் எதையும் சொல்கிறார்களா என பலர் குழம்பியுள்ளனர்.

ஆனால், நியூ ஜேர்ஸி மாநிலத்தில் வீட்டுப் பண்ணைகள் விவகாரம் சர்ச்சைக்குரியதொன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சட்டவிதிகள் இன்றைய வாழ்க்கை முறைக்கும் நகரின் விவசாய பாரம்பரியத்திற்கும் இடையிலான சமரச நடவடிக்கையாகும் என ஹோப்பெல் நகர மேயர் ஜிம் பர்ட் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 04 May 2011 09:09 PM

    'கோக் கோக் கோக் கோக் எங்கே போனாள் இவள்?'
    ஹென்ஹேன் ஹென்ஹேன் ஹென்ஹன் நான் இங்கேதான் மேசைக்கடியில் ஒளிஞ்சிருக்கேன் நீ முனிசிபல் ஒர்டினன்ஸ் பார்க்கலையாடா, முண்டம்?

    Reply : 0       0

    bis Thursday, 05 May 2011 02:27 PM

    மிருகங்களைப்போல உறவு கொள்ளும் கலாச்சாரத்தைக் கொண்ட இந்த அநாகரிகக்காரர்கள் விலங்குகளுக்கு பாடம் புகட்ட வந்துட்டாங்க...

    Reply : 0       0

    fahmy Sunday, 08 May 2011 06:33 AM

    மனம் போன போக்கில் மனிதன் விரும்பியபடி வாழ முடியாது .
    சட்டம் இயற்றும் அதிகாரம் இறைவனுக்கு மாத்திரமே உண்டு.
    மனிதனைப்படைத்த இறைவன் இவ்வுலகில் மனித வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை அமைத்து எப்படி வாழ வேண்டும் என்பதையும் தனது அருள்மறையில் கூறியுள்ளான் .
    ஒரு கட்டுப்பாடான வரையறையை உண்டாக்கி அதட்குள் நின்று வாழ வேண்டும் எனவும் கூறி இருக்க மனிதனோ இறை வேதத்தை ,கடடளைகளை மறுத்து மறந்து ஒதுக்கி விட்டு அதற்கு மாற்றமாக நடக்கின்றான் .உண்மையை மறைக்க முடியாது. மனிதர்களுக்கு உண்மையை தெரியப்படுத்துவது யார் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .