Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 28 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெதர்லாந்திலுள்ள கால்பந்தாட்டக் கழகமொன்று ஒன்றரை வயது மட்டுமே நிறைந்த குழந்தையொன்றை தனது அணி வீரராக இணைத்துக் கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.
18 மாத வயதான பேர்கி வான் டேர் மெஜ் என்ற அந்த குழந்தை கால்பந்து ஒன்றை உதைக்கும் வீடியோ பதிவொன்றை அவதானித்து, வீவீவீ வென்லோ எனும் கழகம், மேற்படி குழந்தையை ஒப்பந்தம் செய்துள்ளது.
குறித்த குழந்தை சரியாக கோல் அடிப்பதை அதனது தந்தை ஒளிப்பதிவு செய்து அதை யூ ரியூப் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஒளிப்பதிவு நாடவை 150,000 பேர் பார்த்துள்ளனர்.
வீவீவீ வென்லோ கழகம் அக்குழந்தையை 10 வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்தக் குழந்தையின் பாட்டனார் அதே அணியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அக் கழகத்தின் பேச்சாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில் அந்த குழந்தை களத்தில் எந்த நிலையில் விளையாடும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றார்.
'ஆனால் நாம் சிறப்பாக பந்தை உதைக்கும் திறமையுள்ள, கால்பந்தாட்ட மரபணுக்களை தமது பாட்டனாரிடமிருந்து பெற்ற வலதுகால் வீரர் ஒருவர் குறித்து நாம் பேசமுடியும்' என அப்பேச்சாளர் தெரிவித்தார்.
CIDDEEQUE Friday, 29 April 2011 05:08 AM
இப்படியும் ஒரு திறமையா . எமது நாடு எப்பதான் ஆசிய கிண்ணம் தூக்குவது?
Reply : 0 0
Nifra Nifras Thursday, 05 May 2011 12:14 AM
இறைவனின் அருட்கொடை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
28 minute ago
35 minute ago