2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் மனிதக் குரங்கு

Kogilavani   / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மனிதக் குரங்கொன்று தனது உடலை உறுதியானதாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. கென்யாவில் சுவீட்வாட்டர்ஸ் எனும் இடத்திலுள்ள நிலையமொன்றில்  இக்குரங்கு உள்ளது.

'பஹட்டி' என்று அழைக்கப்படும் மேற்படி மனிதக் குரங்கு 5 நிமிடங்கள் தீவிரமாக இந்த பயிற்சிகளை செய்து வருகின்றது. முதலில் இந்தக் குரங்கு அதன் கைகளை விரித்து  உடற்பயிற்சியை ஆரம்பிக்கிறது.

பின்னர்  தரையில் படுத்துக்கொண்டு, மெதுவாக தனது கால்களை மேலே உயர்த்தி  தசைகளின் இறுக்கத்தை தளர்த்துக்கிறது. பின்பு இரண்டு  கால்களையும் விரித்துக்கொள்கிறது. பின்னர் அது மிகப் பெரிய கொட்டாவி ஒன்றை விடுக்கின்றது.

'இந்த மனிதக் குரங்கு எம்மீது எந்த கவனத்தையும் செலுத்துவதில்லை. அது தனது வேடிக்கையான ஜிம்னாஸ்டிக் நடவடிக்கைகளை மாற்றி மாற்றி செய்வதிலேயே அக்கறை  செலுத்துகிறது' என இதனை புகைப்படம் பிடித்த ரஷ்ய புகைப்பிடிப்பாளர் அலெக்ஸி டிஸ்சென்கோ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • CIDDEEQUE Friday, 29 April 2011 04:17 PM

    குரங்குக்கும் மனித ஆசை வந்துட்டு போல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .