2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நீதிபதிகளுக்கு எதிராக மொடல் அழகிகள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்வானில் நீதிபதிகள் சிலருக்கு முன்பாக மொடல் அழகிககள் பலர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தாய்வானில் செல்வந்த பெண்ணொருவரின் வீட்டில் வளர்த்து வந்த நாயொன்று அயலவரான மற்றொரு செல்வந்த பெண்ணின் வீட்டுப் பணியாளரின் கணுக்கால்களை கடித்ததற்கு எதிராக நஷ்ட ஈடு கோரி தொடரப்பட்ட வழக்கொன்றை நீதிமன்றம் நிராகரித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பெண்ணொருவர் மொடல் அழகிகளை பயன்படுத்தி நீதிமன்ற வளாகத்தில் போரட்டமொன்றை நடத்தியுள்ளார்.

வோங் சூன் என்ற செல்வந்தர் வளர்த்து வந்த நாய் பாய் லியென்பிங் என்பவரின் வீட்டில் சுத்திகரிப்பு பணியில் இருந்த நபரின் கணுக்காலை கடித்துள்ளது.

இதற்கு நஷ்ட ஈடுக் கேட்டு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால்  நகைப்புக்குரிய வழக்கெனக் கூறி இவ்வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்விவகாரத்தில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு இரு பெண்களுக்கும் நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.

'இவ்வழக்கு உண்மையில் மிகப் பெரிய கேலிக் கூத்தாக உள்ளது. நீதிமன்றம் என்பது பணக்காரர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானம் இல்லை' என நீதிமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 21 April 2011 10:04 PM

    முகத்தை மூடிக்கொண்டு வழக்குகளை விசாரித்த காலம் வரும் நீதிபதிகளுக்கு?

    Reply : 0       0

    siya Saturday, 23 April 2011 02:10 PM

    இது ஒரு பெரும் கடுப்புக்குரிய வழக்கு . கிஷோர் சியா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .