2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தொடுதிரை, சவுண்ட் சிஸ்டத்துடன் நவீன மலசலக்கூடம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 19 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொடு திரை (touch-screen), உட்பொருத்தப்பட்ட ஒலியமைப்பு, சூடான இருக்கை உட்பட ஆடம்பர வசதிகளைக் கொண்ட நவீன மலசலக்கூடமொன்றை அமெரிக்க நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது. 

இதன் விலை 6390 அமெரிக்க டொலர்களாகும். (சுமார் 7 லட்சம் இலங்கை ரூபா).

நியூமி என அழைக்கப்படும் இந்த மலசலக்கூடத்தை கொஹ்லர் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த மலசலக்கூடம் தொடுதிரை வசதி,  நறுமணமூட்டி, முதலியவற்றைக் கொண்டுள்ளது. மிகச் சிறந்த மலசலக் கூட அனுபவத்தை இது கொடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுமையான இரட்டை பிளெஷிங்  தொழில்நுட்பம்,  மற்றும் தானாக திறந்து மூடும் மூடி ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது. இந்த வகையிலான மலசலக்கூடம் நியூ மட்டுமே என கொஹ்லர் நிறுவனத்தின்  உபதலைவர் ஜிம் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 21 April 2011 10:01 PM

    உண்பதற்கே வழி இல்லாத மக்களுக்கு இதெல்லாம் அனாவசியம்!
    புல்லைத் தின்று புழுக்கை போடும் காலம் வரும் போல் தெரிகிறது சில நாடுகளில்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .