2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ரசிகைகளுக்கு வீரர்களின் மனைவியாகும் வாய்ப்பை வழங்கும் கால்பந்துக் கழகம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 18 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போலந்திலுள்ள கால்பந்தாட்டக் கழகமொன்று தங்களது ரசிகைகளில் ஒருவருக்கு தமது அணி வீரரின் மனைவியாகும் வாய்ப்பை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அழகான தோற்றம் கொண்ட பெண்ணொருவரை தெரிவு செய்து அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுமாம்.

இதற்கு தகுதியென கருதுபவர்கள் முன்னணி மொடலிங் முகவர் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்க வேண்டுமெனவும் மொடலிங்கின்போது  எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் இதற்கான தெரிவில் பங்குபற்ற விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லேஜியா வோர்சோவ் எனும் இக் கால்பந்தாட்டக் கழகத்தின் நிர்வாகிகள் 'கெப்டன் குட்டி' என்ற பெயரில் இந்த போட்டியை இம்மாதம் நடத்துகின்றனர்.

'இதில் வெற்றிபெறுபவர் உண்மையான மொடல் அழகியாகும் வாய்ப்பை கொண்டுள்ளார்.  சிலவேளை இவ்வணியில் ஒருவராகும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்காலாம் என்று இத்திட்டத்தின்  ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .