2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தேர்தலுக்காக ஆபாச சுவரொட்டிகள்; பெண் வேட்பாளரின் அதிரடி பிரசாரம்

Super User   / 2011 ஏப்ரல் 17 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்பெய்ன் நாட்டில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களைக் கவர்வதற்காக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

சோல் சான்செஸ் எனும் இந்த வேட்பாளர்  தனது அரை  நிர்வாண, ஆபாசப் படங்கள் கொண்ட சுவரொட்டிகளை அச்சிட்டு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்கிறார்.

ஒரு சுவரொட்டியில் சோல் சான்செஸின் மார்பங்களில் பின்னாலுள்ள ஆண் ஒருவர் கைவைத்திருக்கும் காட்சியும் உள்ளது.

ஸ்பெய்ன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சோல் சான்செஸின் அதிரடி நடவடிக்கைகளைக் கண்டு கலங்கிப் போன எதிரணி வேட்பாளர்கள் இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகாரிட்டுள்ளனர். சோல் சான்செஸ் தனது உடலை பாலியல் ரீதியில் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். பெண்ணுரிமை வாதிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது தொடர்பாக சான்செஸ் பதிலளிக்கையில், 'என்னைவிட வேறு யாரும் அதிக பெண்ணுரிமைவாதியல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் விரும்பும்வரை தம்மை வெளிப்படுத்த உரிமை உள்ளது. நான் எனது விருப்பத்திற்கேற்ப உடலையும் மார்பகங்களையும் பயன்படுத்துகிறேன். அவர்களால் (எதிரணியினரால்) அதை பார்த்துக்கொண்டிருக்க மாத்திரம்தான் முடியும். அதுதான் அவர்களின் பிரச்சினை' எனக் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 18 April 2011 10:31 PM

    இதெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .