Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 09 , பி.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெல்ஜியத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்வரை செக்ஸ் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளுமாறு பெல்ஜிய அரசியல்வாதிகளின் மனைவிகளை அந்நாட்டு பெண் எம்.பியொருவர் கோரியுள்ளார்.
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கடந்த வருடம் ஜுன் மாதம் பொதுத் தேர்தல் நடைடெபற்றது. எனினும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைப் பலம் கிடைக்காத நிலையில் கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இப்பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக இழுபட்டுவருவது குறித்து அந்நாட்டவர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அரசியல்வாதிகளுடன் அவர்களின் மனைவிமார் பாலியல் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என செனட் சபை உறுப்பினரான டெம்மேர்மன் கோரியுள்ளார்.
புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அந்நாட்டு ஆண்கள் சவரம் செய்துகொள்ளாமல் தாடி வளர்ப்பதன் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என நடிகர் பென்னோயிட் கடந்த மாதம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் டெம்மேர்மன் மேற்படி செக்ஸ் பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்
தான் கென்யாவிலிருந்தபோது நடிகர் பென்னோயிட்டின் தாடி வளர்ப்பு போராட்டம் அறிந்ததாகவும் அங்கு வைத்து தனக்கு கென்ய நாடாளுமன்ற பெண் அங்கத்தவர் ஒருவர் இந்த செக்ஸ் பகிஷ்கரிப்பு யோசனையை தெரிவித்ததாகவும் டெம்மேர்மன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்ப்பதில் பெண்கள் ஏதேனும் செய்ய முடியும் எனத் தெரிவித்ததுடன் கென்யாவில் 2009 ஆம் ஆண்டு அரசாங்கம் அமைப்பதில் இழுபறி ஏற்பட்டபோது அங்கு மேற்கொள்ளப்பட்ட செக்ஸ் பகிஷ்கரிப்பு போராட்டத்தையும்; மேற்படி கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினாராம்.
பெல்ஜியத்தில் தேர்தல் நடைபெற்று இன்று வியாழக்கிழமையுடன் 242 நாட்களாகின்றன. விரைவில் இவ்விடயத்தில் பெல்ஜியம் உலக சாதனை படைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே சோமாலியாவைத் தவிர ஈராக்கிலேயே தேர்தல் நடைபெற்ற அதிக நாட்கள் (249) அரசாங்கம் அமைக்கப்படாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியத்தில் தற்போதைய அரசியல் நெருக்கடி பிரெஞ்சு, டச்சு மற்றும் பிலெமிஷ் மொழிபேசும் மக்களை சார்ந்தவையாகும். 150 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு கடந்த தேர்தலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 27 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் பகிஷ்கரிப்பு போராட்டம் குறித்த சிந்தனை வரலாற்றில் நீண்டகாலத்துக்கு முன்பும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கிரேக்க நாடகமொன்றில் பெலோபோனேன்சிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக நாடகத்தின் பெண் பாத்திரங்கள் தமது கணவர்மார்களுடன் பாலியல் உறவை தவிர்த்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு கொலம்பியாவின் பெரேரியா நகரில் பாதாள உலக குழுக்களை ஆயுதங்களை கைவிடச் செய்வதற்கா அந்நகரப் பெண்கள் இதுபோன்ற போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.
xlntgson Friday, 11 February 2011 09:38 PM
சபாஷ்! மானசீகமாக துன்புறுத்தல், விபச்சாரத்துக்கு வழிவகுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு பெண்களுக்கு எதிராக ஆண்கள் உரிமை கோரி போராட வேண்டிய காலமிது! அரசியலில் இருந்து ஆரம்பமாகட்டும்!
Reply : 0 0
xl Saturday, 19 February 2011 03:33 PM
அட போங்கப்பா இது அவனுகளுக்கு பிரச்சினையில்லை!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
4 hours ago