Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 03 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவர் திருமணக்கோலத்துடன் சென்று ஆசிரியர் பரீட்சையை எழுதிய சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது, லுவோ ஜிங்கவோ எனும் பெண்ணே இவ்வாறு திருமண கோலத்துடன் சென்று பரீட்சை எழுதியுள்ளார்.
சீனாவில் ஹெனான் மாகாணம் ஷெங்சூவை சேர்ந்தவர் இப்பெண். தனது திருமண திகதியிலே ஆசிரியர்களுக்கான பரீட்சை நடைபெறுவதாக கல்வி நிறுவகம் அறிவித்ததால் இவ்வாறு திருமண கோலத்துடன் சென்று பரீட்சையை எதிர்கொண்டுள்ளார்.
இவர் 3 மணித்தியால பரீட்சையை எழுதிய பின்பு தனது திருமண பூஜை ஆரம்பிப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னரே பரீட்சை நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
மணமகனான சூ மவோயாங் இது குறித்து விளக்குகையில் 'அவள் பரீட்சையை எழுதி முடித்து வெளியில் வந்தவுடனே புறப்பட வேண்டும் என்பதற்காக திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட காரின் என்ஜினை ஓடவிட்ட வண்ணம் காத்திருந்தேன் ' என்று கூறினார்.
பிரைட் யிங்கோ (வயது 22) தெரிவிக்கையில் "நான் மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன். ஆனால் முதலில் நான் மிகவும் கலவரமடைந்தேன். தற்போது எனக்கு இரு விடயங்களும் மகிழ்ச்சியாகவே அமைந்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
xxx Friday, 04 February 2011 05:52 PM
கடமை உணர்வுக்கு அளவே இல்லயா?
Reply : 0 0
thineswaran Friday, 04 February 2011 10:39 PM
நான் சிறிலங்கா யாழ்ப்பாணம்
Reply : 0 0
xlntgson Sunday, 06 February 2011 09:27 PM
நல்ல அழகான ஆடை தானே, கடமை உணர்வு என்ன கடமை உணர்வு? சோதனையில் சித்தி அடைந்தால் தானே கடமை புரிய இயலும்?
அவர்களது நாட்டில் திருமணத்தை பெரும் கடமையாக நினைக்கின்றார்களோ, தெரியாது!
ஒரு காலத்தில் நமது நாட்டிலும் அவ்வாறு இருந்தது தான், ம்...என்ன செய்ய? காலம் மாறிப்போச்சு!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
4 hours ago