2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பொலிஸாருக்கு தனது பின்புறத்தை காட்டிய பெண் கைது

Kogilavani   / 2011 பெப்ரவரி 02 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது சகோதரனை பொலிஸார் கைது செய்தார்கள் என்பதற்காக,  தனது ஆடையை தூக்கி பின்புறத்தை பொலிஸாருக்கு காட்டிய அமெரிக்கப் பெண்ணொருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டென்னஸி மாநிலத்தின் ஹம்லன் நகரைச் சேர்ந்த ரீட்டா சாம்ப்ரோனா எனும் 45 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த பெண்ணின் சகோதரன் வாகனம் செலுத்திக்கொண்டு செல்லும் போது செய்த தவறுக்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அதைக் கண்ட அப்பெண் தனது  கீழாடையை நீக்கவிட்டு,  மேற்படி பொலிஸ் அதிகாரிகளுக்கு தனது பின்புறத்தை காட்டியுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், பொது இடத்தில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரது சகோதரன் ரொனி வெடல் (வயது 44) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 03 February 2011 09:01 PM

    விடுதலை ஆகிவிடுவார், அந்த இடமும் பொது இடம் என்பதால்! இரகசிய இடம் என்றால்
    ஊசி போட முடியாமல் போகுமே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .