2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

உறவினர்களின் பாதங்களைக் கழுவும் சிறைக்கைதிகள்

Kogilavani   / 2011 பெப்ரவரி 02 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறைச்சாலை கைதிகள் பலரும் தங்களது உறவினர்களது பாதங்களை கழுவிய சம்பவம் சீன சிறைச்சாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

தென் மேற்கு சீனாவில் சிச்சுவான்  மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் சீன புதுவருடத்தையயொட்டி, சிறைக்கைதிகளுக்கு அவர்களது உறவினர்களை வரவழைத்து இப்பாரம்பரிய சடங்குகளை மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறைகைதிகள்  தாம் செய்த குற்றச் செயல்கள் மூலம் தமது குடும்பத்தினருக்கு அவமானத்தை ஏற்படுத்தியமைக்காக, அவர்களது குடும்ப உறவினர்களின் பாதங்களை கழுவி மன்னிப்பு கோரினர்.

இது புரானதமான சம்பிரதாயமாகும். இவ்வாரத்தை நாம் அதனை குடும்ப நேச வாரமாக அமைத்துள்ளோம் என சிறைச்சாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

'150 இற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் 450 இற்கும் மேற்பட்ட ஜோடி பாதங்களை கழுவினர். கைதிகள் தமது குற்றச்செயல்களை உணரச் செய்ய இந்நடவடிக்கை வழிவகுத்துள்ளது.

அது உண்மையில் நல்ல அனுபவமாகும். ஒவ்வொரு உறவினர்களும் இது தொடர்பான புகைப்படங்களை வாங்கிக்கொள்ளலாம்' என்று அப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .