Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 01 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணம் முடித்து ஒரு மாதங்களே ஆகும் நிலையில் பெண்ணொருவர் தனது கணவரை விவாகரத்து செய்வதற்கு மனு தாக்கல் செய்துள்ளார். குறித்த பெண்ணின் கணவன் தேனிலவிற்கு செல்லும்போது தனது தாயையும் தன்னுடன் அழைத்துச் சென்றமையே இதற்கான காரணமாம்.
இத்தாலியைச் சேர்ந்த மரியானா (வயது 36) எனும் பெண் ரோமில் உள்ள தேவாலயத்தில் வைத்து விற்பணையாளரான ஸ்டீபனோ (வயது 39) என்பவரை ஒரு மாதத்திற்குமுன் திருமணம் செய்துக்கொண்டார்.
அண்மையில் பாரிஸில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலுக்கு இருவரும் தேனிலவிற்குச் செல்லலாம் என்று அப்பெண் எண்ணியிருந்தார். இதன் மூலம் தனது மாமியாரிடமிருந்தும் தற்காலிக விடுதலை கிடைக்கும் என அவர் எண்ணியிருந்தார்.
ஆனால், அவர் நினைத்ததிற்கு மாறாக அவரின் கணவன் ஸ்டீப்னோ இரகசியமாக தனது தாயையும் தேனிலவு இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தாராம்.
அழகு சிகிச்சைக் கலைஞரான மரியானா, விமானநிலையத்தில் வைத்து மாமியாரை கண்டபோதே இந்தத் திட்டத்தை அறிந்திருக்கிறாள்.
அந்தப் பெண்ணின் சட்டத்தரணி கெய்சின்டோ கென்ஸோனோ இது தொடர்பாக தெரிவிக்கையில், அப்பெண்ணுக்கு உண்மையில் அவரது கணவரிடமிருந்து விவாகரத்து தேவைப்படுகிறது. ஏனென்றால் அவளது கணவன் தாய் மீது அசாதாரண அன்பு நிறைந்தவனாக காணப்படுகின்றார் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்படி மாமியார் இத்தம்பதிக்கு அயல் வீட்டிலேயே வசிக்கிறார். எனினும் அவர் தம்முடன் தேனிலவுக்கு வருகிறார் என மரியானா அறிந்துக்கொண்டபின் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது.
அவர்கள் மூவரும் பாரிஸிற்கு ஒன்றாக பயணித்துள்ளனர். ஆனால் மிகவும் பதற்ற நிலையான பயணமாக அது காணப்பட்டது.
தன்னுடைய கட்சிக்காரர் அவரது கணவரை விட்டு விலகி நேபிள் நகரில் வசிக்கிறார் என்று குறித்த பெண்ணின் சட்டதரனி தெரிவித்துள்ளார்.
gama Wednesday, 02 February 2011 09:03 PM
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
4 hours ago