Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜனவரி 28 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, ஆளுயர செக்ஸ் பொம்மைகளுடன் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உல்லாசப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
டேவ் ஹொக்கி எனும் 57 வயதான நபரே இவ்வாறு 6 பாலியல் பொம்மைகளுடன் பயணம்செய்துள்ளார். மேற்படி பொம்மைகள் தயாரிப்பு நிறுவனத்திற்காக அவர் இப்பயணங்களை மேற்கொள்கிறார்.
அவர் தனது போலி 'நண்பிகளுடன்' கிறேட் கென்யோன் மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சி உட்பட பல இடங்களுக்கு இதுவரை சென்றுவந்துள்ளார்.
2,000 ஸ்ரேலிங் பவுண் விலையுள்ள இந்த சிலிக்கன் பொம்மைகளுடன் களியாட்ட பூங்காக்கள், குதிரைச்சவாரி நிகழ்வுகளுக்குச் சென்றதை அவர் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
ஏனைய பொம்மைகளின் உரிமையாளர்களுடன் தான் கலந்துரையாடியதையும் அவர் பதிவு செய்துள்ளார். 16,000 ஸ்ரேலிங் பவுண் செலவிலான பயணம் குறித்து தனது மனைவி ஆட்சேபிக்கவில்லை என டேவ் ஹொக்கி கூறுகிறார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான அந்நபர் இது குறித்து விளக்குகையில், 'இது ஒரு பொழுதுப்போக்கு என்பதை எனது மனைவி அறிவாள். அவள் இந்த பொம்மைகள் குறித்து அஞ்சுவதில்லை. 80 இறாத்தல் எடையுடை இந்த சிலிக்கன் பெண் பொம்மையுடன் நான் ஓடிவிட மாட்டேன் என்று மனைவிக்குத் தெரியும்' என்கிறார்.
அவர் இந்த பொம்மைகளுக்காக 1,270 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான ஆடைகள், அணிகலன்களையும் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'நான் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வாங்கினேன். அவைகள் மிகவும் அழகாக இருந்தன. அவை அழகில்லை என்று யாராவது சொன்னால் பொய் சொல்கிறார்கள் என எண்ணுகிறேன்' என்கிறார் டேவ் ஹொக்கி.
xlntgson Saturday, 29 January 2011 09:32 PM
பாலியல் பொம்மையா, மறுபடியுமா? அய்யோ, அய்யோ சினிமாவை ஆரம்பத்தில் விளையாட்டாகவும் பொழுது போக்காகவும் தான் நினைத்தார்கள். பின்னர் அது வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து விட்டது. இந்த பொம்மைகளோடு ரொபோ கணணி நுட்பத்தையும் இணைத்து விட்டால் தாம்பத்தியம் கூட நடத்துவார்கள் போல் தெரிகிறது!
தொடர் மாடி வீடுகள் முதலில் நாகரிகம் போல் வந்தது இப்போது அது தான் கதி, பலருக்கு ஆடம்பரமாகிவிட்டது!
போத்தல்களில் அடைத்த நீரைப்போல் இன்னும் சொல்லப்போனால் தாய்ப்பால் மறந்து பால்மாவுக்கு மாறிய மாதிரிதான், என்ன?
பிளாஸ்டிக் வாழ்க்கை!
Reply : 0 0
Diwakar Tuesday, 01 February 2011 06:48 AM
சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர் xingston
Reply : 0 0
xlntgson Monday, 21 February 2011 09:06 PM
நன்றி, Diwakar, செயற்கை இயற்கையை மிகைக்கப்பார்க்கிறது அதற்கான களமும் அமைக்கப்படுகிறது என்று சுருக்கமாக சொன்னால் உங்களுக்கு உடன்பாடாக இருக்கும் என்று நினைக்கின்றேன். காகிதப் பூக்களை எங்களுடைய காலத்தில் நாங்கள் நிராகரித்தோம், விலையும் குறைவாக இருந்தது; வாசனை நிறைந்த பூக்கள் எங்கும் விலை குறைவாக கிடைத்தது. இப்போது பிளாஸ்டிக் பூக்கள் விலையாக இருந்தாலும் வாடாமலர்களாக அலங்கரிப்பதைக் காணலாம். செயற்கையை விரும்பியோ விரும்பாமலோ திணிக்கப்படும் நிலை காணப்படுகிறது என்று தான் நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
4 hours ago