2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தனது உடலுக்கு மேல் ரயில் செல்வதை படம்பிடித்த நபர்

Kogilavani   / 2011 ஜனவரி 28 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்ட நபர் ஒருவர்,  தனக்கு மேலாக ரயில் விரைந்துசெல்லும் காட்சியை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.  முட்டாள்தனத்தின் உச்சம் என இந்நடவடிக்கையை பலர் விமர்சித்துள்ளனர்.

மேற்படி மனிதர்,  தண்டவாளத்தில் மீது படுத்தபடி இருக்க,  பயங்கரமான முறையில் ரயிலானது அவரை அண்மிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

வெறும் 56 நிமிடங்களில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ யூ டியூபில் இணைக்கப்பட்டபோதுஇ அதை  270இ000 பேர் பார்த்துள்ளனர். எனினும் பின்னர் அந்த வீடியோ யூ டியூபிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது.

வீடியோவில் அந்த மனிதனின் செயலை பார்க்கும்போது அச்சமூட்டுவகையில் அந்த காட்சி அமைந்துள்ளது.

20 விநாடிகளின் பின்னர்  அந்த நபர் தனக்கு காயம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு எழுந்து,  ரயில் தண்டவாளத்திலிருந்த தனது ஒளிப்பதிவு கருவியை தூக்க ஓடிச்சென்றார்.

இந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் அதை 'முட்டாள் தனத்தின் உச்சம்'  என பிரிட்டனின் நெட்வேர்க் ரயில் நிறுவனம் விமர்சித்துள்ளது.

பிரித்தானிய ரயில்வே வலையமைப்பின் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில், 'அந்த மனிதனின் மேலாடை ரயிலில் சிக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை எண்ணும்போது தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

அது மாத்திரமல்ல, ரயில் சாரதி தன்னால் ஒரு மனிதர் கொல்லப்பட்டுவிட்டார் என்றே நினைத்திருப்பார்.

தனது பாதுகாப்பு மற்றும்  மற்றவர்களினது  உணர்வுகள் குறித்த அக்கறையில்லாதவர்கள் தான் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .