2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பாரிய பிரா

Kogilavani   / 2011 ஜனவரி 25 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இறுக்கமான மார்புக் கச்சைகளை அணிய நேரிடுவதால் பல பிரச்சினைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மிகப் பருமனான பெண்களுக்கு பொருத்தமான மார்புக் கச்சைகள் இல்லாத நிலையில் அதிக பாதிப்புகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

தற்போது அப்பிரச்சினைகளுக்கு தீர்வுக் காணும் வகையில் 'எல்' அளவிலான பெரிய  பிராக்களை பிரிட்டனின் பிரபல உள்ளாடை  உற்பத்தி நிறுவனமொன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

பிராவிசிமோ எனும் இந்நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரிய மார்பகங்களை கொண்ட பெண்களுக்காக ' கே.கே' எனும் 28 அங்குல உள்ளாடையை அறிமுகப்படுத்தியிருந்தது.

ஆனால் அந்த கே. கே அளவு உள்ளாடையும் பல பெண்களுக்குப் போதுமானதாக இல்லையென்று வாடிக்கையாளர்காளால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அதைவிட பெரிய 'எல்' அளவிலான பிராவை மேற்படி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த பல தசாப்தங்களில் பெண்களின் உடலமைப்பில் மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை என்பவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பெண்களின் மார்பளவு அதிகரித்து வந்துள்ளது என அந்நிறுவனம்  தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில், 80 வீதமான பெண்கள் தவறான அளவுடைய உள்ளாடையை அணிகின்றனர். பெரிய அளவிலான இப்புதிய பிரா சரியான அளவுடைய ஆடையை  தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம் எனக் கூறியுள்ளார்.

ஆனால் இந்த பாரிய அளவுடைய பிராவை எப்படி வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என பிரித்தானிய பத்திரிகையொன்று வேடிக்கையாக விளக்கியுள்ளது.

கைப்பை, பூந்தொட்டி, கால்பந்துப் பை உட்பட இன்னும் பல விடயங்களுக்காக அவை உபயோகப்படுத்தப்படலாம் என பெண்ணொருவர் விளக்கியுள்ளார்.

 


 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 26 January 2011 09:18 PM

    முலைக்கச்சு அவசியமில்லை, ஒரு காலத்தில் இதை எல்லா இடங்களிலும் போட்டு எரித்தனர் பெண்கள், அடிமைச் சின்னம் என்று. இப்போது முலைகளை பெரிதாக்கப்போய்- சிலிகான் வைத்து- சிகிச்சையின் போதே இறந்து விடுகின்றனர், ஜெர்மனியில் மொடல் அழகி (மோட அழகி?) ஒருத்தி இவ்வாறு இறந்து இருக்கிறாள்.
    மருத்துவர்கள் தப்பிவிட்டனர், ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, "அபாயமான சிகிச்சை என்று தெரிந்தே செய்து கொள்கின்றேன்"

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .