Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜனவரி 21 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் அகப்பட்ட இளம் ஜோடியொன்று செக்ஸ் பொம்மையைப் பயன்படுத்தி நீந்தி நதியொன்றை கடக்க முயன்றபோது பெரும் நெருக்கடிக்குள்ளானது.
அத்துடன் இத்தகைய செக்ஸ் பொம்மைகளை மிதக்கும் சாதனங்களாக பயன்படுத்தக்கூடாது என்ற அறிவுறுத்தலை பொலிஸார் விடுப்பதற்கும் இச்சம்பவம் வழிகோலியுள்ளது.
குயின்ஸ்லாந்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் யாரா ஆறு பெருக்கெடுத்தபோது ஒரு ஆணும் பெண்ணும் தமது வீட்டிலிருந்து ஆளுயர செக்ஸ் பொம்மைகளை மிதவைகளாக பயன்படுத்தி அந்த ஆற்றை கடந்து செல்ல முற்பட்டனர்.
ஆனால், மேற்படி பெண் கடுமையான நீரோட்டத்தில் தன்வசமிருந்த பொம்மையை தவறவிட்டதால் பேராபத்தை எதிர்நோக்கினார். 19 வயதுடைய அவர்கள் இருவரும் வெள்ள நீரில் பெரும் சிரமப்பட்டனர்.
அவர்கள் மரக்கொம்பொன்றை பிடித்தவண்ணம் மற்றவர்களின் உதவிக்காக எதிர்பார்த்திருந்தனர். அதிஷ்டவசமாக அவர்களை கடந்துச்சென்ற ஒருவர் அவசர உதவிப் பிரிவினருக்கு தொடர்பை ஏற்படுத்தி இது குறித்து அறிவித்துள்ளார்.
ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸாரும் அவசர சிகிச்சைப் பிரிவினரும் அந்த ஜோடியை காப்பாற்றினர். எனினும் இவர்களின் நடவடிக்கை குறித்து பொலிஸார் கடும் விசனம் தெரிவித்தனர்.
அப்பெண் அணிந்திருந்த கீழாடையையும் வெள்ளம் அடித்துச்சென்றது. அவருக்கு மீட்புப் பணியாளர்கள் ஆடைகளை கொடுத்து உதவினர்.
இச்சம்பவத்தின்பின், இத்தகைய செக்ஸ் பொம்மைகளை மிதவைப் பொருட்களாக பயன்படுத்துவது புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல என குயின்ஸ்லாந்து மாநில பொலிஸார் பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
xlntgson Sunday, 23 January 2011 08:13 PM
ஆள் உயரத்துக்கு ஏன் இதை செய்து விற்கிறார்கள்?
மனிதர்களுக்கு மதிப்பில்லாமல் செய்யவா?
எதை எதை எல்லாம் தடை செய்கிறார்கள் இம்மாதிரியான சிலைகளுக்கு தடை விதிக்க முயலாதா, அப்படி இயலாவிடில் இதை 'அதுக்கு' பயன்படுத்தாமல் இந்த மாதிரி கட்டத்தில் உயிர் தப்ப பயன்படுத்தினால் என்னவாம், கொள்ளையா நடந்து விடும்?
அது=சுய இன்பம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
4 hours ago