Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜனவரி 20 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்ட் சம்பவமொன்று போலந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது.
பயொலொகர்ட் நகரில் சேர்ந்த சார்ஜன்ட் அன்ட்ரிசிஜ் டைமென்ஸ்கி எனும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது மேலதிகாரி விதித்த இலக்கை பூர்த்தி செய்வதற்காக தனக்குத் தானே அபராதம் விதித்துக்கொண்டாராம்.
குறித்த தினத்தன்று மாலையில் மேலதிகாரி விதித்த இலக்கை பூர்த்தி செய்வதற்கு இன்னும் ஒருவர் மாத்திரம் சார்ஜன்ட் டைமன்ஸ்கிக்கு தேவைப்பட்டுள்ளார். அதனால் அவர் ரயில் தண்டவாளத்தில் நடந்து அதற்காக தனக்குத் தானே 5 யூரோ அபராதம் விதித்துக்கொண்டாராம்.
'எனக்கு மேலும் ஒருவர் மாத்திரம் அபராதம் விதிப்பதற்கு தேவைப்பட்டார். என்னால் பொலிஸ் மேலதிகாரியின் சொல்லை மீறமுடியவில்லை. அதேவேளை விதிகளை மீறாத எவருக்கும் நான் வீணாக அபராதம் விதிக்க விரும்பவில்லை. அதனால் நான் ரயில் தண்டவாளத்தில் நடந்தேன். அக்குற்றத்திற்காக எனக்கு நானே அபராதம் விதித்துக்கொண்டேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
Mahadevah Friday, 21 January 2011 03:27 PM
எங்கள் நாட்டு பொலிஸாருடன் இவரை ஒப்பிட்டுப் பாருங்கள்! மனச்சாட்சிக்குப் பயந்த நல்ல மனிதர் இவர்.
Reply : 0 0
yarro oruvan Tuesday, 25 January 2011 05:34 PM
தி கிரேட் பொலிஸ் ஒபீசர் இவர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
5 hours ago