Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜனவரி 20 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தையொன்றுக்கு ஏற்பட்ட பக்கவாத நோயை குணப்படுத்துவதற்கு தேவைப்பட்ட பணத்தை சேகரிப்பதற்காக போலந்தைச் சேர்ந்த இல்லத்தரசிகள் பலர் நிர்வாணமாக நின்று கலண்டர் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
இச்சிகிச்சைக்காக உண்டியல் குலுக்கி பணம் சேகரிக்க அவர்கள் விரும்பவில்லை. மாறாக கண்களுக்கு விருந்தளிக்கும் கலெண்டருக்கு காட்சிக் கொடுப்பதனூடாக சுமர் 13 லட்சம் ரூபா பணத்தை சேகரிப்பதற்கு தயாராகினர்.
இப்பணமானது ஜூலியா கோபர் என்ற 4 வயது குழந்தை மீண்டும் நடப்பதற்கு உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போலந்தில் உள்ள அந்த 4 வயதுக் குழந்தையின் நோயை குணப்படுத்த விசேட மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த சிகிச்சைக்குப் போதிய பணம் திரட்ட முடியாமல் அக்குழந்தையின் குடும்பத்தினர் தவித்துக்கொண்டிருந்தபோது, அக்குழந்தையின் உறவினரான ஈவா மார்சினிக் எனும் 38 வயதான பெண், இக் கலெண்டர் குறித்த யோசனையை தெரிவித்துள்ளார்.
'நான் எனது தோழிகளுக்கு இந்தக் பிள்ளையின் நிலைமைக் குறித்துக் கூறினேன். கட்டாமயாக அந்தக் குழந்தைக்கு உதவவேண்டும் என்று தீர்மானித்தோம். நாங்கள் மலர்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளை உள்ளடக்கிய கலண்டர்களை தயாரிக்கலாம்.
ஆனால், நிர்வாண நிலையில் நிற்கும் கலெண்டர்கள் அதிகமாக விற்கக்கூடியது. எனவே அந்த சங்கடங்களை மீறி, அந்த நோயுற்ற குழந்தைக்கு உதவ நினைத்தோம்' என அவர் விபரித்துள்ளார்.
xlntgson Friday, 21 January 2011 10:07 PM
இல்லத்திகள், இல்லத்தரசிகள் அல்லர்கள்! இல்லத்துக்கு அரசியாக இருப்பவள் எல்லாருக்கும் காட்டுவாளா?
பப்பி ஷேம். பப்பி ஷேம் ஆல் த மங்க்கி நோஸ் யுவர் நேம்!
Puppy shame puppy shame; all the monkey knows your name!
Reply : 0 0
sltj.blogspot.com Sunday, 23 January 2011 08:53 PM
அவர்கள் தான் போஸ் கொடுத்தார்கள் என்றால் , நீங்களும் பிரசுரித்து
விட்டீர்கள் . மன வருத்தமாக இருக்கிறது. எதிர்காலத்தில் தவிர்ந்துக்
கொள்ளுங்கள்.
Reply : 0 0
xlntgson Saturday, 29 January 2011 09:23 PM
sltj. அம்மணமாக இருந்தால் தானே குற்றம்?
இலை மறைவு காய் மறைவாகத்தானே இருக்கிறது, அப்படி இல்லாமல் உலக செய்திகளை நமக்கு ஊடகம் எப்படி தரும்?
செய்திகளை அறிந்து கொள்வது எப்படி?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
4 hours ago