Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Super User / 2011 ஜனவரி 14 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலையில் தங்கியிருந்தபோது தனது அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்போவதாக நியூயோர்க் நகரைச் சேர்ந்த முன்னாள் கைதியொருவர் தெரிவித்துள்ளார்.
தனது உறுப்பை எலி கடித்துவிட்டதால் பெரும் எண்ணிகையிலான நோய்த் தடுப்பூசிகளை தான் ஏற்ற வேண்டி வந்ததாக பீற்றர் சொலமன் எனும் இக்கைதி கூறியுள்ளார்.
குறித்த சிறை அறையில் எலி இருப்பது அதிகாரிகளுக்கு தெரியும் எனவும் தான் ஓர் கறுப்பினத்தவர் என்பதால் அப்பகுதியை அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
50 வயதைக் கடந்த பீற்றர் சொலமன், வியட்நாம் யுத்தத்தில் பங்குபற்றிய முன்னாள் இராணுவ வீரர் ஆவார். மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டு காரணமாக 2007 ஆம் ஆண்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தனது மெத்தையிலுள்ள துவாரமொன்றின் ஊடாக வந்த எலி, தனது அந்தரங்க உறுப்பையும் கையையும் கடித்ததாக சொலமன் தெரிவித்துள்ளார்.
எனினும், அவருக்கு தீவிரமான காயங்கள் எதுவும் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லையென கூறும் நௌஸவ் பிராந்திய அரச அதிகாரிகளின் சட்டத்தரணிகள், இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
காயங்களுக்கு தையல் எதுவும் போடப்படவில்லை எனவும் அவரின் காயங்களுக்கு உளவியலேயே அதிக காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடித்தது எலியா, சுண்டெலியா, அது கடித்ததா பிறாண்டியதா, மற்றும் காயத்தின் அளவு குறித்து விவாதித்துக்கொண்டிருப்பதாக நுகூறியுள்ள நீதிபதி ஆர்தர் ஸ்பாட் இவ்வழக்கு விசாரணை தொடரும் என அறிவித்துள்ளார்.
xlntgson Saturday, 15 January 2011 08:32 PM
ஹி...ஹி...ஹி...அதையும் கடிக்குமா எலி,
எலி என்று நினைத்துக்கொண்டதோ,
அப்படி யானாலும் அது கொஞ்சி அல்லவா இருக்கவேண்டும்
ஓஹோ, அவை கொஞ்சுவதும் அதே பாஷையில் தான் போலும்!
Reply : 0 0
yarro oruvan Sunday, 16 January 2011 05:21 PM
எதை எதைத்தான் எலி கடிக்கும் என்று தெரியாது. நமது சிறைச்சாலைகளில் எலி மாதிரம் அல்ல பாம்புகளும் உண்டு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
4 hours ago