Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2011 ஜனவரி 12 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூயோர்க்கில் புதுவருடத்தையொட்டி சுமார் 3,500 ரயில் பயணிகள் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்தவாறு ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய புதுவருடக் கொண்டாட்டத்தை இவ்வாறு காற்சட்டைகளை நீக்கி, இடுப்புக்கு கீழ் வெறும் உள்ளாடைகளை அணிந்த வண்ணம் பாதாள ரயிலில் பயணம் செய்வதனூடாக கொண்டாடுவது வழக்கம்.
'காற்சட்டை இல்லாமல் ரயில் பயணம்' என இது அழைக்கப்படுகிறது. கடந்த திங்களன்று 10 ஆவது தடவையாக இவர்கள் இந்நிகழ்வை நடத்தியுள்ளனர்.
அவர்கள் குறித்த நேரத்தில் தமது பிரதேச ரயில் நிலையங்களில் ஒன்றுகூடி ரயிலில் ஏறியபின் ஒரே சமயத்தில் தமது காற்சட்டைகளை கழற்றி பைகளில் வைத்துக்கொண்டமை பலரை வாய்ப்பிளக்கச் செய்தது.
இந் நிகழ்வில் பங்குபற்ற முன்வந்தவர்களுக்கு இரண்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் காற்சாட்டைகளை நீக்கியவாறு பயணம் செய்ய முன்வர வேண்டும், இவ்விடயத்தில் துணிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்நிகழ்வில் பங்குபற்றுபவர்கள் யாரும் ஒருவரோடு ஒருவர் உரையாடக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவர்களின் நடவடிக்கையை பொதுமக்களில் எவரேனும் எதிர்த்தால் தாம் காற்சட்டை அணிய மறந்துவிட்டு வந்ததைப்போல் நடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இவர்கள் 2002 ஆம் ஆண்டு முதல் தடவையாக இவ்வாறான ஒரு நிகழ்வை ஏற்படுத்தினர். இது தற்போது உலகம் முழுதும் பரந்து காணப்படுகின்றது. 50 நகரங்களில் 10 ஆயிரக் கணக்கானோர் இந்நிகழ்வில் பங்குபற்றியுள்ளனர்.
லண்டனில் சுமார் 100 பேர் இதில் பங்குப்பற்றியிருந்தனர். ஜொஹான்னர்ஸ்பர்க் நகரில் 34 பேர் இத்தகைய நிகழ்வில் பங்குபற்றியபோது பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைவிலங்கிடப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் பின்னர் குற்றச்சாட்டு எதுவுமின்றி விடுவிக்கப்பட்டனர்.
UWAIS Monday, 17 January 2011 01:44 AM
இது என்னடா! இப்படியும் ஒரு சமுதாயமடா!!
Reply : 0 0
xlntgson Tuesday, 18 January 2011 08:53 PM
கலாச்சாரம்:
கிழக்கும் மேற்கும் சந்திக்குமிடம்!
பார்ப்பதை தடுக்க முடியாது,
அவ்வாறு உடுத்தினால் பார்ப்பவர் ஒரு முறை 2 முறை திருப்பி திருப்பி பார்க்கத் தான் செய்வார்.
கூச்சம் இல்லாமல் செய்து கொள்ளவும் மேலை நாட்டவர் இவ்வாறு செய்வது உண்டு, அதையும் கழற்றிவிட்டு!
அவர்கள் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க இந்த மாதிரி எல்லாம் உணர்ச்சி மழுங்கடிப்புகள் தேவை என்று நினைப்பவர்கள் இம்மாதிரியான செய்திகள் அவர்களுக்கு உணர்ச்சி மழுங்கடிக்க செய்ய மாட்டாது!
எம்மவருக்குப் போல்!
பார்த்தால் சிரித்தால் குற்றம்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025